எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

1966 நவம்பர் 7ஆம் தேதியன்று பட்டப் பகலில் பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் புதுடில்லியில் பச்சைத் தமிழர் காமராசரைப்  படுகொலை செய்ய முயன்ற ஜனசங்கம் (இன்றைய பிஜேபி) ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கூட்டம் எப்படியெல்லாம் வன்முறை வெறியாட்டம் ஆடியது.

ஜனசங்கத்தின் அதிகாரபூர்வ ஏடான "ஆர்கனைசர்" தீபாவளி மலரில் வெளிவந்த கேலிச்சித்திரம் இது. நேற்று -- நேரு இருந்தார். இன்று - காமராசர் இருக்கிறார். நாளை - சூன்யம்தான்! அதாவது அவர் விரைவில் ஒழிக்கப்பட்டு விடுவார் என்ற பொருளில் அது இப்படத்தை வெளியிட்டுள்ளது.

"பிளிட்ஸ்" படப்பிடிப்பு இதோ:

"குருஜி கோல்வால்கரின் முகமூடியணிந்த ஃபாசிச நடவடிக்கைகளுக்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இந்தி பேசும் பகுதிகளைச் சார்ந்த சில முதலமைச்சர் களால் மிகவும் பலமாக வற்புறுத்தப்பட்டு வருகிறார்.

கொஞ்ச காலமாக வடநாட்டில் உள்ள ஒரு பிரிவினர் வகுப்பு வெறியின் உச்சக்கட்டத்தில் அது செய்யும் எவ்வளவு கிரிமினல் குற்ற நடவடிக்கை களில் ஈடுபட்ட போதிலும்கூட எக்காரணத்தைக் கொண்டும் அந்த ஆர்.எஸ்.எஸ்.மீது கைவைக்கப்படலாகாது. அரசாங்க நடவடிக்கை கூடாது என்று கருதப்பட்டு வந்தது. "தூங்கும் நாய்கள் அப்படியே இருக்கட்டும்! அதை எழுப்புவானேன்?" என்ற எண்ணம் இப்போது வேரூன்றத் துவங்கியுள்ளது.
கைதாகப் பயந்த கலவரத் தலைவர்

"சர் சங் சாலக்" என்ற பெயருடன் விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.இன் வல்லவரும், வழிகாட்டியுமான குருஜி கோல்வால்கரே, கடந்த அவரது "மஞ்சள் பட்டாளம்" தீ வைப்பும், நாசவேலையும் செய்த அந்த கருப்புத் திங்களன்று டில்லியை விட்டு ஓடிவிட்டார்.

கலவரத்திற்கான அணி வகுப்புகள் நடைபெறுவதற்கு முன்பே கோல்வால்கர் டில்லிக்கு வந்து சேர்ந்தார். பெரும் கொட்டை எழுத்துகளில் சுவரொட்டிகளில் அவரது வருகை பிரகடனப்படுத்தப்பட்டதோடு பசு சேனைக்குத் தக்க முறையில் வழிகாட்ட அவர் வருகிறாரென்றும் விளம்பரப்படுத்தப்பட்டது!

சாதுக்கள் பட்டாளத்தின் தாக்குதலுக்குப் பின் அவர்கள் நையப் புடைக்கப்பட்ட பின்பும், தீ வைப்புக் கலகக்காரர்கள் கைது செய்யப்பட்ட பின்பும் போலீசார் ஜெயின் முனியையும், இந்து முனியையும் தேடினர். ஜெயின் முனி கைது செய்யப்பட்டபோதிலும் கோல்வால்கரை அவர்கள் பிடிக்க முடியவில்லை! காரணம் அவர் தப்பித்துக்கொண்டு போய்விட்டார்!

அவர் நாகபுரிக்கு போனபிறகும்கூட நடைபெற்ற அதர்மமான சம்பவங்களைப்பற்றி ஏதும் சொல்லாமல் வாயை இறுகமூடிக் கொண்டுதான் இருந்தார். அவரது பிரமாதமான ‘சாலக்குகள்' எல்லாம் கூட பயத்தால் பீடிக்கப்பட்டுவிட்டதோடு இவரை எப்படியாவது நட வடிக்கைகளிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்று அதிகாரிகள் முன்னால் மண்டிபோட்டு கெஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டது! என்றாலும், கலவரத்திற்குக் காரண மான முக்கிய சாதுத் தலைவர்களையும், ஆர்.எஸ்.எஸ். காரர்களையும். ஜனசங்கக்காரர்களையும் பிடித்து உள்ளே போடும் நடவடிக்கைகளை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்.மீது தீவிர  நடவடிக்கைக்கு வாய்ப்பு

சில காலத்திற்குமுன்பு நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிக் கூறப்பட்ட பற்பல யோசனைகளை மீண்டும் பரிசீலனை செய்வதற் குரிய சரியான சூழ்நிலை. இம்மாதிரி நடவடிக்கைகளால் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். சங்கத்தினை ஓர் அரசியல் கட்சியாக அரசு பிரகடனப் படுத்துவதும், அரசாங்கக் குறிப்புகளில் உள்ள யோசனைகளில் ஒன்றாகும். இப்போது அது தன்னை ஒரு கலாச்சார ஸ்தாபனம் என்று தம்பட்டம் அடித் துக் கொண்டிருக்கிறது.!

அதை ஓர் அரசியல்கட்சி என்று பிரகடனப்படுத்தி விட்டால், பிறகு அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அதில் சேருவது தடைப்படுத்தப்பட்டுவிடும். இந்திப் பிரதேசங் களில் ஏராளமான அரசாங்க ஊழியர்கள் பலர் இதில் சேர்ந்துள்ளனர். இதற்கிடையில் முன்பு ஆர்.எஸ்.எஸ். செய்துகொண்ட பழைய ஏற்பாட்டின்படி அது என்றென் றும் ஒரு கலாச்சார ஸ்தாபனமாகவே இயங்கும் என்று முன்பு கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டதற்காக, அதன்மீது தக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என வற்புறுத்திப் பிரபலமான முதலமைச்சர் ஒருவர் பிரத மருக்கு எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்க ஒரு முதல்வர் முயற்சி!

1949-இல் அரசாங்கத்திற்கும், ஆர்.எஸ்.எஸுக்கும் ஏற்பட்ட உடன்பாடு உருவானதற்கும், கோல்வால்கர் சிறையிலிருந்து விடுதலையாவதற்கும், ஆர்.எஸ்.எஸ்.மீது போடப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கும் இம்முதலமைச்சரே முன்னின்றவர்களில் ஒருவராவார்

1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி காந்தியார் கொலை செய்யப்பட்ட 5 நாட்களுக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கதாகும்.
ஆகஸ்ட் மாதம் சர்தார் பட்டேலுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்காகவே கோல்வால்கர் விடுதலை செய்யப்பட்டார். அவர் ஒத்துவர மறுத்த நிலையில் மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ்.எஸுக்கு தென்னகப் பார்ப்பனர் ஆதரவு

இந்தக் கூட்டத்தில் மூன்றாவது நபர்கள் சிலர் தலையிட்டு ஓர் உடன்பாட்டை ஏற்படுத்த முனைந்தனர். அவர்களில் முக்கியமானவர் சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராம சாஸ்திரி ஆவார். அவர்தான் ஆர்.எஸ்.எஸ். சட்ட திட்டங்களை எழுதித்தந்தார்.

அரசாங்கத் தரப்பில் வற்புறுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அதன் பலாத்கார நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்பதாகும். கோல்வால்கர் இதுகுறித்து தமது நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதற்கு கோல்வால்கர் இணங் கினார். எனவே ஆர்.எஸ்.எஸ்.ஸின் சட்ட திட்டங்களில் நான்காவது விதியில் "பலாத்காரத்திலோ, ரகசியமான நடவடிக்கை முறைகளிலோ", "நம்பிக்கையுள்ள எவருக் கும் சங்கத்தில் இடம் கிடையாது என்பது இதன்மூலம் தெளிவாக்கப் படுகிறது" என்ற வாசகங்கள் காணலாம்.

கோல்வால்கர் கொடுத்த வாக்குறுதி

சர் சங் ஜாலக் கோல்வால்கர் அவர்களால் தெளிவு படுத்தப்பட்ட மற்றொரு விஷயம் என்ன வென்றால் அவர்களது இந்தப் புது உடை மாற்றத்தின் மூலம் அப்போது எழுதப்பட்டு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு விசுவாசத்துடன் இருப்போம் தேசியக் கொடிகள் கீழ் வணங்கி இருப்போம் என்ற உறுதிமொழியாகும்.

அதோடு கிளை ஸ்தாபனம் மாநில ஸ்தாபனங்களுக்கு உரிய முறையில் தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கும் ஆர்.எஸ்.எஸ். கணக்குகளை ஆடிட் செய்வதற்கும் அவர் ஒப்புக் கொண்டார்.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் மவுலி சந்திர சர்மா சிறையிலிருந்து கோல்வால்கருடன் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் பெறப் பட்டவைகளாகும். அதன் பிறகே, 1949-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டதோடு அந்த ஸ்தாபனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை யும் நீக்கப்பட்டது. அதிலிருந்து அந்தக் கோஷ்டியினர், இந்து சமாஜத்தைத் தூய்மைப் படுத்துவதற்கான ஒரு கலாச்சார ஸ்தாபனமாக இயங்குவதாகக் கருதப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அதன் சட்ட திட்டங்களில் அதற்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. மத்திய அரசாங்கத்தில் இருந்த சில வட்டாரங்களுக்கு அதன் மீது இருந்த அனுதாபம், ஆதரவு காரணமாக அதன் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியிலும் சேர்ந்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். உறுதிப்படி நடக்கிறதா?

இந்தச் சட்ட விதிகளுக்கு எவ்வளவு தூரம் கீழ்ப் படிந்து கட்டுப்பட்டு ஆர்.எஸ்.எஸ். நடக்கிறது என்பதே முதலமைச்சர்களால் இப்போது கேட்கப் படும் கேள்வி யாகும். பலாத்கார நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருப்பது என்பது அதன் முக்கிய சட்ட விதிகளில் ஒன்று. வெகு காலத்திற்கு முன்பு இது காற்றில் விடப்பட்டது.

ஜெய்ப்பூர் கலவரத்தை விட்டுத் தள்ளினாலும் கூட கல்கத்தா - ரூர்கேலா - ஜாம்ஜெட்பூர் ஆகிய இடங்களில் உள்ள சிறுபான்மை கூட்டத்தாரைக் கொன்று குவித்த நிகழ்ச்சிகள் நவம்பர் 7ஆம் தேதியன்று பார்லிமென்ட் மாளிகையைச் சுற்றியும் காமராசர் வீட்டு முன்பும் நடத்திய கோர வெறியாட்டங்கள் ஆகியவைகள் - சட்ட பூர்வமாக ஆர்.எஸ்.எஸ். இயங்குவதற்காக 1949 ஆம் ஆண்டு உடன் செய்துகொண்ட நடவடிக்கையை மீறியவை ஆகும் என்பதற்கு ரத்தக்கறை சாட்சியங் களாகும்.

கடந்த 7-ஆம் தேதி திங்களன்று நடைபெற்ற ரத்தம் சிந்திய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்கும் பார்வை யாளர்கள் அனைவரும் சமீப காலமாக ஆர்.எஸ்.எஸ்.சின் நடவடிக்கைகளில் எத்தகைய திடுக்கிடும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கவனித்து வருகின்றனர்.

தென்னாட்டவர்மீது போர்க்குரல்

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பார்லிமென்ட் தெருவி லிருந்த படேல் சிலையிலிருந்து இரு சாலைகளிலும் இருந்த பல வீடுகளைத்தாண்டி காமராசரின் வீட்டிற்கு நேரே சென்றனர். பாதி எரிக்கப்பட்ட மற்றொரு வீடு அமைச்சர் ரகுராமைய்யா அவர்களுடையதாகும். சமீப காலமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் வகுப்புத் துவேஷ வெறியர்களாக இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து மிகத் தெளிவாக விளங்கும். இதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டிலும் மற்றும் தென்னாட்டின் பல பகுதிகளிலும் அரசியல் வேறுபாடுகளையும் தாண்டி அவர்கள் ஆத்திரம் பொங்கும் நிலை உள்ளது.

பிரிவினைக்கு வித்து

ஆர்.எஸ்.எஸ். இவ்வாறு தென்னாட்டவருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அனுமதிக்கப்படு மானால், அது நாட்டுப் பிரிவினைக்கு புதுடில்லியிலே வித்தூன்றுவதாகிவிடும். அதன் சட்டதிட்டங்களில் உள்ள பல்வேறு பிரிவுகளை ஆர்.எஸ்.எஸே மீறி இருக் கிறது. ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவே ஜனசங்கம்.

எடுத்துக்காட்டாக ஆர்.எஸ்.எஸ்.சில் நிர்வாகப் பொறுப்பாளர்களாக உள்ள எவரும் அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கக் கூடாது என்பது அதன் விதிகளில் ஒன்று. ஆனால், 1959-க்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். காரர்களில் பலர் ஜனசங்கத்தின் தேசியக் கவுன்சிலில் சுமார் 80 சதவிகிதத் திற்குமேல் நிரப்பப்பட்டனர். வேறு எந்த அரசியல் கட்சிகளிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இல்லை.

ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமே ஜனசங்கம் கட்சி என்பது உறுதியானதோர் உண்மை. பல்வேறு மட்டங்களில் உள்ள அதன் கிளைகட்கு தேர்தல் நடத்துவது அதன் கணக்குகளைத் தணிக்கை செய்வது ஆகியவைகள் சம்பந்தமாக அதுமுன்பு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் மந்தமாகி விட்டன. தேர்தல் என்பதே ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபனம் அறியாத ஒன்றாகும்.

1925-இல் ஹெட்கேவார் என்ற ஒருவர் இந்த ஸ்தா பனத்தை உண்டாக்கினார். அவர் 1940-இல் எம்.எஸ். கோல்வால்கரை நியமித்தார். அதுமுதல் இன்று வரை இவரின் இச்சைப்படி நடைபெறும் ஸ்தாபனமாகவே அது இயங்கி வருகிறது.

இவ்வாறு "பிளிட்ஸ்" ஏடு விவரித்திருக்கிறது.

- 'காமராசர் கொலை முயற்சி சரித்திரம்' நூலிலிருந்து...

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner