எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாழ்வியல் சிந்தனைகள் -கி.வீரமணி

ஜப்பானின் வளர்ச்சி - நாகசாகி, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு - அக்கதிர் வீச்சுகளால் இன்றளவும் தாக்கும் விளைவுகள் - இவை எல்லாம் மனித குலம் தனக்குத்தானே அழுது புலம்பி, பாடம் பெறவேண்டிய அவலங்கள் ஆகும்!

அத்தகைய ஜப்பான் நாட்டின் மீட்டுருவாக்கம் எவ்வளவு வியக்கத்தக்கது!

இன்றும் அந்த நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறியுள்ள நாடு.

கட்டுப்பாடும், அடக்கமும், கடும் உழைப்பும் நாணயமும் தான் அவர்களை இவ்வளவு இடை யூறுகள், இயற்கை உபாதைகளான ‘சுனாமி’ என்னும் ஆழிப்பேரலைகள், புயல் - பூகம்பங்கள், எரிமலை வீச்சுகள் இப்படி எத்தனையோ சோத னைகள்

அம் மக்களை படாதபாடுபடுத்தினாலும் கூட, அவற்றைத் துணிவோடு சந்தித்து, துவண்டுவிழாமல் மீண்டும் தங்களது வழமையான அன்றாடப் பணி களை எவ்விதக் கிலேசமும் இன்றி சாதித்து மகிழ்கிறார்கள்!

இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட இரு நாடுகள் ஒன்று ஜெர்மனி, இன்னொன்று ஜப்பான்.

இருநாட்டு நாணயங்களின் மதிப்பும் ‘கெட்டி யாகவே’ - குறையாத அளவு நிலைநிறுத்தப்பட்டு வருகிறதே. இதற்கெல்லாம் மூலகாரணம் அந்நாட்டு மக்களின் கடும் உழைப்பும்தானே!

ஜப்பானில் ‘ரோபோக்கள்’ மனிதர்களின் பணி அத்தனையும் செய்து கொள்ளும் அளவுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது!


இன்று வந்துள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டில் ஒரு சிறு செய்தி. எவ்வளவு பெரிய நம்பிக்கையை - உடல் நலம் குன்றியவர்களுக்குக் கூட - ஏற்படுத்திக் கொடுக்கிறது!

பக்கவாதத்தினால் உடலின் பகுதி பாதிக்கப்பட்டு கால்களைக் கொண்டு நடக்க முடியாமல் முடக் கப்பட்டுள்ளவர்கள் கூட, உடற்பயிற்சி செய்து நடந்து தங்களது சிந்தனையில் ‘வாழ நினைத்தால் வாழலாம் - வழியா இல்லை கேளுங்கள்’ என்பது போல ஒரு புதிய ‘ரோபோ’ ஒன்றைக் காலில் இணைத்துக் கொண்டு - உடை கால்சட்டை போல - டிரெட்மில்லில் (Tread Mill)நாள்தோறும் நடைபயிற்சி செய்தால் நலவாழ்வை மீட்டெடுக்க முடியும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது - நிரூபிக்கவும் பட்டுள்ளது.

டோக்கியோவின் டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனின் தலைமையகத்தில் இணைத்துக் கொள்ள ‘ரோபோ கால்களையே’ முட்டிக்குக் கீழே இணைத்து, இதற்கென பிரத்தியேகமாக உருவாக் கப்பட்ட டிரட்மில்லில் நடக்க வைக்கலாமாம்!

இந்த ‘வெல்வாக் ஷ்ஷ்-1000 ww-1000 (Wellwalk-ww1000 system)என்பது ஒரு மோட்டார் இணைந்த இயந்திர உறுப்பினை முட்டிக்கீழே இணைப்பதால் நோயாளிகள் இதனைக் கட்டிக் கொண்டு, ‘டிரட் மில்லில்’ நடக்கப் போதிய பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம்!

இதற்கென தயாரிக்கப்பட்ட ‘டிரட்மில்’ கருவி இவர்களது எடையையும் தாங்கும் சக்தியை உள்ளடக்கியதாம்!

இத்தகைய வசதிகளை உள்ளடக்கிய ரோபோடிக் நடைபயிற்சி கருவிகள் முதலில் நூறு (100) தயாரித்து - மருத்துவ வசதிகளுடன் கூட இக்கருவிகளை - டெயோட்டோ கம்பனி வாடகைக்கு விடுகிறார் களாம்!

மனித அறிவின் மகத்தான வளர்ச்சிக்கு எல்லை தான் ஏது?

“எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும்”, “உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பறவை யாகுமா?”, “ஏதோ காலத்தை தள்ளிக்கொண்டு போகிறேன்”, “வெந்ததைத்தின்று விதி வந்தால் சாவோம்” ‘‘ஆண்டவன் விட்ட வழி!’’ என்று கூறும் மடமைக்கோ, சோம்பலுக்கோ சாக்குருதி வேதாந் தத்திற்கோ அங்கே இடமே இல்லை பார்த்தீர்களா?

எல்லாம் நன்நம்பிக்கையுடன் கூடிய ‘நம்மால் முடியும்’ என்ற திடசித்தமே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner