எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்று (9.3.2017) உலக சிறுநீரகப் பாதுகாப்பு நாள்.

நம் உடலில்  நோய்களினால் நாம் தாக்கப்படும் போதுதான் உடலின்  எல்லா உறுப்புகளுமே - உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நம்மால் உணர முடிகிறது. அது வரையில் நாம் இதயம், மூளை இவையே அதி முக்கியம் என்று நினைத்து, தெரிந்தோ தெரியாமலோ மற்ற உடல் உறுப்புகளையும் சம அளவில் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை என்பது வருத்தத்துடன் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று!

நமது உடலில் சிறுநீரகம் ஒரு மிக முக்கிய உறுப்பு ஆகும்.

CKD (Chronic Kidney Disease)  என்ற சிறுநீரக நோய் பெரிய உயிர்க் கொல்லியாகும். அது ஆர்ப்பாட்டமின்றி அழைப்பு விடும் மரணத்திற்கு!

1) சர்க்கரை நோய்

2) ரத்தக் கொதிப்பு

- இந்த இரண்டும் சிறுநீரகங்களை கொஞ்சம் கொஞ்சமாக பாழ்படுத்தி, நோயுறச் செய்து உயிர்க்கிறுதியாக்கக் கூடியவை என்பது பலரும் அறிந்ததே!

இந்தியாவின் பெருமை என்ன தெரியுமா? உலகின் சர்க்கரை நோயின் தலைநகரம் (Capital of the Diabetia World)  ஆகும். 7 கோடி மக்கள் இந்தி யாவில் பாதிப்படைந்தவர்களாவர்.

2040இல் இந்த  7 கோடி பேர் நோய் (சர்க்கரை வியாதி) 12 கோடியாக பெருக வாய்ப்புள்ளது! இந்த நோயாளிகளில் பாதி பேர் சிறுநீரகப் பாதிப்பு பழுதுள்ள நோயாளிகளே ஆவார்கள்!

சர்க்கரை நோய் ஒரு "சந்திப்பு நோய்"(Junction Disease) பல பக்கம் உடலில் பாய்ந்து பாதிப்பை, பழுதை ஏற்படுத்தும்.

கண் பார்வை, பக்கவாதம், ரத்தக் குழாய் பாதிப்பு, கை கால் எடுத்து விடல், விரல்களை வெட்டுதல், இதய நோய், மாரடைப்பு, ரத்தக்குழாய் சுருக்கம் -  இத்தியாதி, இத்தியாதி...

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, (Kidney Transplantation மூலம் சாவைத் தள்ளிப் போடலாம்!

நம் சம காலத் தலைவர்களை இதனால் நாம் இழந்துள்ளோம் என்பது துயரமான செய்தியாகும்! சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அண்மைக் காலத்தில் குறிப்பாக சிறுநீரகப் பழுதை சரி பார்த்து சிறுநீரக சுத்திகரிப்பு முறை (டையாலிசிஸ்) என்பவை நம் நாட்டில், ஏழை, எளியவர்களுக்கு வெகுக் குறைந்த செலவில் கிடைத்தால் நல்லது!

நமது நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், மருத்துவமனை நடத்தும் அறக்கொடையாளர்களும் இணைந்து இந்த இயந்திரங்களை நன்கொடையாகப் பெற்று ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு உதவலாம்!

சர்க்கரை நோய் ஏற்படுவதற்குள்ள முக்கிய காரணங்கள்.

1) அதிக பருமன் (எடை) உடல்.

2) அதிக ரத்தக் கொதிப்பு (B.P.).

3) கொழுப்பு (அதிக கொலஸ்ட்ரால்) சேர்தல்.

4) குடும்ப வரலாறும்கூட.

சிறுநீரகம் பற்றி விழிப்புணர்வை ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் அவரவர் வயதைப் பொறுத்து ஒருமுறை அல்லது இருமுறை பரிசோதனை செய்து கொள்ள பரவலாக வசதியுள்ளதே!

பலர் இதில் ஏனோ "அலட்சியம்" காட்டுகின்றனர்! சிறுநீர்ப் பரிசோதனை மூலம் சிறுநீரகக் கோளாறைக் கண்ட றியலாமே!

1. மைக்ரோ அல்புமினூரியா (Microalbuminuria) என்ற பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பயப்படாதீர்கள் கவலைப்படாதீர்கள்!

2. உணவில் உப்பை 5 கிராமுக்குள் மட்டுமே எடுத்துக் கொள்ள முயலுங்கள் (குறைந்தாலும் ஆபத்து மறவாதீர்!)

3. ரத்தக் கொதிப்பு 130/80 மிகாமல், குறையாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்!

- கி.வீரமணி, வாழ்வியல் சிந்தனைகள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner