Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- மின்சாரம் -

ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யப் போகிறார்கள்.

அனேகமாக தமிழ்நாட்டில் இரு கூட் டணிகளில் ஒன்று தி.மு.க., தலைமை யிலானது.  இன்னொன்று அ.இ.அ.தி.மு.க. தலைமையிலானது. இன்னும் முற்றிலுமாகக் கூட்டணிகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

திமுக தலைமையிலான அணி உருவாக்கப்பட்டு வேட்பா

ளர்கள் நேர்காணலும் நடக்கத் தொடங்கி விட்டது.

கடந்த தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாகக் கம்பீரமாக உலா வந்தது.

இந்த முறை அதே தேர்தல் அறிக்கை இன்னொரு பரிமானத்தில் பல்லக்கில் வரப் போகிறது.

தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கை வழியாக நாங்கள் தமிழ்நாட்டு மக்கள் முன் வைத்த உறுதிமொழிகளை இதோ நூறு சதவிகிதம் நிறைவேற்றிக் கொடுத் திருக்கிறோம்.

உங்கள் பொன்னான வாக்குகளை எங்களுக்குத் தாருங்கள் என்று நெஞ்சு நிமிர்த்தி வாக்காளர்களை நோக்கிப் பெருமிதத்துடன் அறிவு நாணயத்துடன் அடி எடுத்து வைக்கிறது ஆளும் தி.மு.க.

பெண்களுக்கென்றே அடுக்கடுக்கான சாதனைகள்! தமிழ்நாட்டுப் பெண் தலைவர்கள் அன்னை நாகம்மையாரில் ஆரம்பித்து, மூதாட்டி மூவாலூர் இராமா மிர்தம் அம்மையார், அன்னை தரு மாம்பாள், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, அன்னை மணியம்மையார், அஞ் சுகத்தம்மையார், டாக்டர் சத்தியவாணி முத்து என்ற பெரும் அணி வகுப்பு!

தமிழ்நாட்டுப் பொது வாழ்வில் மின்னும் இந்த அன்னைமார்கள் பெயரில் பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை வளர்ச்சித் திட்டங்கள்!

இந்தியாவிலேயே சுய உதவிக் குழுக் கள் என்றால் அது தமிழ்நாட்டில்தான் - _ அதுவும் தி.மு.க. ஆட்சியில்தான் ஜொலிக்கிறது.

29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள்.

4 லட்சத்து 28 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி.

20 இலட்சத்து 75 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி!

திருநங்கைகள் (அரவாணிகள்) என்பவர்களுக்காகத் தனி வாரியம் உலகிலேயே தமிழ்நாட்டில்தான்!

நியாயமாகப் பார்க்கப் போனால் தமிழ்நாட்டுப் பெண் வாக்காளர்கள் நடக்க இருக்கும் தேர்தலை தங்களுக்கான தேர்தலாகத் தலையில் சுமந்து வீதிக்கு வர வேண்டும்.

அருமை அம்மா,
அருமை அக்கா,
அருமைத் தங்காய்!

நமக்கென்றே நடைபெறும் கலைஞர் ஆட்சியின் சாதனைகளால் நேர்முக மாகவும், மறைமுகமாகவும் அதிக பலன் பெற்றவர்கள் நாம், நாம், நாம்! பலன் பெற் றவர்கள் பெண்கள், பெண்கள், பெண்கள்!

நம் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று சத்துணவை உண்டு வாரத்துக்கு மூன்று முட்டைகளையும் சாப்பிட்டு நோயற்ற பிள்ளைகளாகத் துள்ளி விளையாடு கிறார்களே! அந்தக் கண் கொள்ளாக் காட்சிக்கு கைம்மாறு என்ன?

21 லட்சம் கான்கிரீட் வீடுகள் என்றால் சாதாரணமா? ஆண்களைவிட பெண் களாகிய நமக்குத்தானே இதில் பெரும் -- லாபம் _ வசதி!

வீட்டை ஆளுவது நாம்தானே! நமக்குத்தானே அதன் அருமை தெரியும் - _ அவசியமும் புரியும்!

ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றாலும், 50 ரூபாய்க்கு முக்கிய மளிகை சாமான்கள் என்றாலும், இதிலும் நம் முடைய சுமையைக் குறைக்கும் சூட்சமம் தான் இருக்கிறது என்பதை மறந்து விடலாமா?

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதும்தான் எத்துணைப் புரட்சி!

பசியால் நம் பிள்ளைகள் சுருண்டு கிடந்தபோது நம் வயிறு எப்படியெல் லாம் பற்றி எரிந்தது -_ ஒரு காலத்தில்!

இன்று அந்த நிலைமை உண்டா? தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு என்ற பேச்சு உண்டா?

ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும் வீட்டுப் பராமரிப்பும், பிள்ளைகள் பராமரிப்பும் இன்னும் நம்மைச் சார்ந்து தானே இருக்கிறது!

இதற்கு முன்புகூட ஒரு தாய்க்குலம் ஆட்சிப் பீடத்தில் இருந்ததே -_ பெண் களின் சுமையை அது இறக்கி வைத்த துண்டா?

திருத்துறைப்பூண்டியிலே பட்டினியால் ஒரு குழந்தை இறந் தது என்று கம்யூனிஸ்ட் தலைவர் குற்றப் பத்திரிகை படித்தபோது அந்த அம்மணி திருவாய் மலர்ந்தாரே நினைவிருக்கிறதா? (அந்தக் கம்யூனிஸ்ட் தலைவருக் கும்தான் இப்பொழுது நினைவில் இருக்குமா!)

பட்டினியால்தான் அந்தக் குழந்தை செத்துப் போனது என் பது உண்மையானால், அதே வீட்டில் இன்னும் இரு குழந்தை கள் இருக்கின்றனவே அவை ஏன் சாகாமல் இருக்கின்றன என்று துடுக்காகக் கேட்ட அந்தப் புண்ணியவதி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரலாமா? அமர விடலாமா?

வேட்டி கட்டிய தாயாக அல்லவா கலைஞர் இருக்கிறார்! அதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

3 லட்சத்து 54 ஆயிரம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 240 கோடி ரூபாய் உதவியை அள்ளி வழங்கினாரே இந்த மனுஷன். நினைத்துப் பார்க்க வேண்டாமா? இந்த உதவி பெற்ற  பிள்ளைகள் எல்லாம் மிட்டா மிராசு வீட்டுப் பிள்ளைகளா? நாம் பெற்ற பிள்ளைகள் அல்லவா?

பிள்ளைகளைப் பெற்ற மகராசிகளான நமக்கல்லவா இதன் அருமை பெருமை தெரியும். கிராமத்துப் பிள்ளைகளுக்குப் படிப்பில் சலுகைகள்; நம் வீட்டுப் பிள் ளைகள்கூட என்ஜினீயராக வருவார்கள் என்று எந்தக் காலத்தில் நாம் கனவு கண்டோம் _ நினைத்துதான் பார்த்தோம்?

அதோ வாரான் பாரு, நம்ம பிள்ளை -_ பேண்டு சர்ட்டுப் போட்டுக்கிட்டு, மிலிட் டரிக்காரன் மாதிரி பூட்சு போட்டுக்கிட்டு புள்ள போறான் பாரு! பூரிக்குதே பெற்ற வயிறு!

அந்தப் புண்ணியவான் மறுபடியும் ஆட்சியில் அமர்ந்து நம் வயிற்றில் எல்லாம் பால் வார்க்க வேண்டாமா?

நமக்கு எப்பதான் வேலையில்லை. இந்த ஒரு மாசத்துக்கு நேரத்தை எப்படியாவது ஒதுக்கி தாய்மார்களே, நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வீட்டுக்கு வீடு போவோம்; கதை பேச அல்ல; தாய்க் குலத்துக்கு கலைஞர் அரசு செய்திருக்கிற சாதனைகளை எடுத்துச் சொல்லிச் சொல்லி, கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல திருப்பித் திருப்பி மனப்பாடம் செய்ய வைத்து, உதயசூரியன் ஜெகஜோதியாக சுடர் விட நாம் உழைக்க வேண்டாமா?

வீட்டில் கிளி வளர்த்தால் அதற்குக் கூட சொல்லிக் கொடுக்க வேணும்.

சூரியன், சூரியன் என்று சொல்லு மாறு பயிற்சி கொடுக்க வேணும்.

இதற்கு முன்னால் ஏதோ தேர்தல் அன் னைக்குப் போய் ஓட்டுப் போட்டு வந்ததோடு நம் கதை முடிஞ்சுது. இந்தத் தடவை நாம் அப்படியெல்லாம் இருக்கக் கூடாது தங்கச்சி! நமக்கான ஆட்சியை நாமதானே கொண்டாருன்னும்? நன்றி என்பதுதான் மிக முக்கியம். நன்றியைப் பற்றிப் பெண் களுக்குச் சொல்லிக் கொடுக்கணுமா?

வெறும் வாய் வார்த்தையில் அல்ல!

தேர்தல் அன்னைக்கு வாக்குச் சாவ டிக்குத் தவறாமல் போயி உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுப் போட்டு, நம்மக் கடமையைச் செய்தால்தான் நமது மனசு ஆறும்! இந்த ஒரு மாசத்துக்கு வேறு பேச்செல்லாம் வேண்டாம்; வேண்டவே வேண்டாம்!

இந்த முறை தமிழ்நாட்டுத் தேர்தல் மிக வித்தியாசமாக இருந்தது _ பெண்களே அணிவகுத்துப் புறப் பட்டார்கள்; எங்கு பார்த்தாலும் அவர்களின் கைகளில்தான் பதாகைகள்!

பெரிய புரட்சியையே நடத்திக் காட்டி விட்டார்கள் என்று ஊரும் சொல்லனும்; உலகமும் மெச்சனும்.

வெற்றியை நிர்ணயித்தவர் தமிழ்நாட்டின் தாய்க்குலமே என்ற சரித்திரத்தைப் படைப்போம்! தாய்க்குலமே, தயார்தானா?



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh