எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சைப் பேரணி - ஒரு நடைச் சித்திரம்

தொகுப்பு: மின்சாரம்

திராவிடர் கழகத்தில் பேரணி - அதுவும் தஞ்சை என்றாலே தனிச் சிறப்புதான். பேரணி செல்லுவதற்கான நான்கு ராஜ வீதிகள் அதன் தனியழகே. மா மன்னர்கள் பவனி வந்த வீதிகளிலே வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் அவர்களின் "கருஞ்சட்டைக் கொள்கைச் சேனைப் படை பெருத்ததால், பார் சிறுத்ததோ!" என்று சொல்லும் வண்ணம் வீறு கொண்டு வீர நடை போட்டது.

சரியாக மாலை 5 மணிக்கு தஞ்சை இரயில்வே சந்திப்பு நிலையத்திலிருந்து பேரணி புறப்பட்டது. பேரணியை மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் கழகக் கொடி அசைத்து, உரையாற்றி பேரணியைத் தொடங்கி வைத்தார்.

99 வயது 'இளைஞருக்கு' வாழ்த்து

கருநாடக மாநில பெங்களூரு முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் வீ.மு. வேலு அவர் களின் 99ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்தாக கழகத் தலைவர் அவருக்கு மாநாட்டு மேடையில் பயனாடை அணிவித்து வாழ்த்தினார்.

தலைமை: மாநில அமைப்புச் செயலாளர்கள் மதுரை வே. செல்வம், தருமபுரி ஊமை . ஜெயராமன், ஈரோடு த. சண்முகம், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், முன்னிலை: மானமிகு தோழர்கள், மண்டல திராவிடர் கழகத் தலைவர்கள் மா.பால்இராசேந்திரம் (நெல்லை), மா.பவுன்ராசா (மதுரை), மு.நாகராசன் (திண்டுக்கல்), சாமி. திராவிட மணி (சிவகங்கை), இர.இராசு (புதுச்சேரி), பெ. இராவணன் (புதுக்கோட்டை), க.மு. தாஸ் (விழுப்புரம்), சி.சுப்பிரமணியன் (சேலம்), மு.நற்குணன் (திருச்சி), பெ.வீரையன், (பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக செயலாளர்), ப. சுப்ரமணியன் (தலைவர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), தே.பொய்யாமொழி (இயக்குநர், பெரியார் சமுகக் காப்பு அணி) க. கண்ணன், (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) இரா.செந்தூர்பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்), நா. இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), சி.மணியன், அல்லிராணி (பொதுக்குழு உறுப்பினர்கள்),        இரா. வெற்றிகுமார் (தஞ்சை மண்டல இளைஞரணி செய லாளர்), அ.தனபால் (தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்கள்)  கோவை ஆர். பிரபாகரன், தருமபுரி த. யாழ்திலீபன், மதுரை தி.இலக் கியா, முத்து இராஜேந்திரன் (தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் துணைத்தலைவர்), ச.சந்துரு (தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளர்), தீ.வ.ஞானசிகாமணி (தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளர்), இரா.சேகர் (தஞ்சை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர்), செ.ஏகாம்பரம் (தஞ்சை ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர்), பா.விஜயகுமார் (தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர்).

பேரணி தஞ்சை இரயில்வே சந்திப்பில் தொடங்கி ஆற்றுப்பாலம் - காந்தி சாலை (பெரியார் அண்ணா சிலை வழியாக) கீழவாசல் காமராசர் சிலை, ராஜபாளையம் கீழ ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, மேல ராஜவீதி வழியாக மாநாடு நடைபெற்ற திலகர் திடலை வந்தடைந்தது.

மாநாடு, பேரணியை ஒட்டி பேரணிப் பாதைகள் மட்டு மல்ல; நகரமெங்கும் கழகக் கொடிகளின் காடாகக் காட்சி அளித்தது. விதவிதமான சுவரொட்டிகள் மாநாட்டுக்குக் கட்டியம் கூறின. பேரணி கீழ்க்கண்ட வரிசைப்படி அணி வகுத்துச் சென்றது.

விளம்பர வண்டி, தப்பாட்டக் குழு, காவடியாட்டக் குழு, தீச்சட்டிக் குழு, பெரியார் பிஞ்சுகள் அணிவகுப்பு, சடையார் கோயில் கோலாட்டக் குழு, மகளிரணி பெரியார் சமூகக் காப்பாளர் அணி வகுப்பு, இளைஞரணி அணி வகுப்பு, திராவிடர் தொழிலாளரணி, வழக்குரைஞரணி பணி, திராவிட இயக்க சாதனை, விளக்க ஊர்திகள், பத்து மாவட்ட வாரியாகக் கழகத் தோழர்கள் அணி வகுப்பு என்று நூல் பிடித்தது போல இராணுவக் கட்டுப்பாடோடு பல்லாயிரக்கணக்கில் அணி வகுத்துச் சென்ற காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

ஊர்வலத்தில் ஒலி முழக்கம் எழுப்பியோர்

சு. சிங்காரவேல் (தலைமைக் கழகப் பேச்சாளர்), ப. மணியம்மை (மாநில மாணவர் கழக இணைச் செயலாளர்), கோவை. சிற்றரசு (கோவை மாவட்ட தலைவர்), யாழ். திலீபன் (தலைமைக் கழகப் பேச்சாளர்), முத்து. கதிரவன் (தலைமைக் கழகப் பேச்சாளர்), கோ. செந்தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்), சே.மெ. மதிவதனி (மாநில மாணவ கூட்டு செயலாளர்) ச. அஜித்தன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), இறைவி (சென்னை), வே. இராஜவேல் (தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர்), கோரா. வீரத்தமிழன் (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர்), த. யாழ்திலீபன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), செ. தமிழ்செல்வன் (திராவிடர் கழகம்), மாங்காடு மணியரசன் (தலைமைக் கழகப் பேச்சாளர்).

அச்சிட்டுக் கொடுக்கப்பட்ட 50 முழக்கங்களை மேற்கண்ட தோழர்கள் ஒலி பெருக்கி மூலம் எடுத்துச் சொல்ல, ஊர்வலத்தில் அணி வகுத்தோர் அவற்றைத் தொடுத்துச் சொன்னதும், தனிச் சிறப்பு.

மாநாட்டுக்கு வராத பொது மக்கள் அந்த முழக்கங்களைக் கேட்பதன் மூலம் திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கத்தை அறிய முடிகிறது அல்லவா. சமூகநீதி, மதச் சார்பின்மை, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, மதவாத எதிர்ப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவுத் தொடுப்பு என்று தந்தை பெரியார் கோட்பாடுகள் ஒலி முழக்கங்களாக மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந்தன.

மகளிர் தீச்சட்டி

பேரணியில் கழக மகளிரணியினரும், பாசறை அணி யினரும் அனாயாசமாக தீச்சட்டியைக் கைகளில் ஏந்தி "தீச்சட்டி இங்கே  - மாரியாத்தாள் எங்கே?" என்று முழங்கி வந்த காட் சியைக் கண்ட - கேட்ட பொது மக்கள், குறிப்பாக பெண்கள் மலைத்துப் போய் நின்றனர். பெண்கள்கூட இப்படியெல்லாம் தீச்சட்டி ஏந்தி, இத்தகைய முழக்கங்களைப் போடுவார்களா என்று அதிசயத்து நின்றனர்.

அலகுக் குத்தி

முதுகில் அலகுக் குத்தி மாருதி ஆம்னி காரை இரு இளைஞர்கள் கடவுள் மறுப்பு முழக்கமிட்டு இழுத்து வந்த காட்சி - இளைஞர் வட்டாரத்தை, மாணவர்களைச் சுண்டி இழுத்தது. சில இடங்களில் இளைஞர்களும் "கடவுள் இல்லை" என்று சத்தம் போட்டது தனிச் சிறப்பாகும்.

திருத்துறைப்பூண்டி நகர திராவிடர் கழகச் செயலாளர் நாகராசன், பாபனாசம் கழகத் தோழர் முத்து ராஜா ஆகிய இந்த இரு தோழர்களும்தான் மாருதிகாரை இழுத்து வந்த அந்த இரு இளைஞர்களுமாவார்கள்.

பெரியார் சமூகக் காப்பணி

பேரணியில் பொது மக்களைப் பெரிதும் கவர்ந்த முக்கிய அணி வகுப்பு - பெரியார் சமூகக் காப்பணி அணி வகுப்பாகும். தோழர்கள் தஞ்சை பெரியார் செல்வன், அண்ணா. சரவணன், பொய்யா மொழி, விழுப்புரம் கார்வேந்தன் ஆகியோர் வழிகாட்ட நூறு இளைஞர்கள் தமிழ்க் கட்டளையை ஏற்று இராணுவ மிடுக்குடன் அணி வகுத்த அந்தக் காட்சி அனைத்துத் தரப்பினரையும் பெரிதும் கவர்ந்தது. தஞ்சை பறை முழக்கம், தப்பாட்டக் குழுவினர் மதுக்கூர் ஒன்றியம் சொக்கனூர் குழுவினரின் பறை முழக்கம் சும்மா தூள் கிளப்பியது.

சடகோபன் - ஈசுவரி நன்கொடை

வேலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் குடியாத்தம் சடகோபன் - ஈசுவரி ஆகியோரின் 45ஆம் ஆண்டு திருமண விழாவையொட்டி அன்னை மணியம்மையார் அறக்கட்டளைக்கு ரூபாய் பத்தாயிரத்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினார்கள். அந்த இணையருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொண்டார் தமிழர் தலைவர்.

(தஞ்சாவூர் - 23.2.2019)

கறம்பக்குடி கழகத் தோழர் முத்து, சண்முகம் குழுவினரின் சிலம்பாட்டம் தனிச் சிறப்பே!

கூரிய அரிவாள் மீது ஏறி நின்று.....

முக்கூட்டுக்கு முக்கூடு பளபளக்கும் கூரிய அரிவாள்மீது ஏறி நின்று சிறுவர்களும், இளைஞர்களும் 'கடவுள் இல்லை', 'கடவுள் இல்லவேயில்லை' என்று கர்ச்சனை செய்த காட்சி மெய்ச் சிலிர்க்கக் கூடியதாகும். குறிப்பாக அறந்தாங்கி இரா. யோகராஜா, மா. சக்திவேல் ஆகியோர் இதனை மக்கள் கும்பல் கும்பலாக நிற்கும் இடங்களில் எல்லாம் செய்துகாட்டி அசத்தினர்.

பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம்

கறம்பக்குடி முத்து குழுவினர் தாம் சிலம்பாட்டம் செய்ய முடியுமா! இதோ பாருங்கள் நாங்கள் என்று பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம் பலே! பலே!! மணப்பாறை பெரியார் பிஞ்சுகளின் இந்த சிலம்பாட்டத்தை வழி நடத்தியவர் ஆர். பாலமுருகன்.

கோலாட்டம் என்ற கோலாகலக்காட்சி

நமது பேரணி என்றாலே சடையார் கோயில் ஆசிரியர் நாராயணசாமி அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெறும் கோலாட்டமும் கொள்கைப் பாடலும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே!

அது சிறப்பாகவே நடந்தது. அரியலூர் விஷ்ணு, செல்வக்குமார், செல்வராசு, எஸ். செல்லக்குமார் ஆகிய தோழர்கள் அலகுக் காவடி எடுத்து வந்து பகுத்தறிவு முழக்கங்களை முழங்கினர்.

பேரணியில் கழகத் தோழர்கள், குறிப்பாகப் பெண்கள் இருவர் இருவராக கொள்கை முழக்கமிட்டு அணிவகுத்த காட்சி தஞ்சை வாழ் மக்களுக்குப் புதிராகவேயிருந்தது.

பேரணியில் வந்தவர்கள் பல்லாயிரவர் என்றால் பார்த்த பொது மக்களோ பல்லாயிரவர் ஆவார். சனிக்கிழமை கடைகள் உண்டு. ஆதலால்  கடை வீதிகளில் வியாபாரிகளும் பணியாளர்களும், பொது மக்களும் ஆங்காங்கே கழகப் பேரணியின் பேரிகை முழக்கத்தையும், அணி வகுத்துச் சென்ற நேர்த்தியினையும் வெகுவாகக் கண்டு களித்தனர்.

மேலராஜ வீதி, மத்திய கூட்டுறவு வங்கி அருகில் அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் தமிழர் தலைவர் நின்று பேரணியைப் பார்வையிட்டார். பேரணியில் அணி வகுத்த கருஞ்சட்டைக் குடும்பத்தினர் தமிழர் தலைவரைக் கண்ட உற்சாக மிகுதியில் முழக்கமிட்டும், வணக்கம் தெரிவித்தும் வீறு நடை போட்டுச் சென்றனர். கழகத் தலைவர் அணி வகுத்துச் சென்ற தோழர்களின் அன்பு வணக்கத்தை ஏற்று பதிலுக்கு வணக்கம் தெரிவித்த வண்ணமே இருந்தார்.

மாலை 5 மணிக்கு தஞ்சை இரயில்வே நிலையத்திலிருந்து புறப்பட்ட கருஞ்சட்டைப் பேரணி இரவு 7மணிக்கு 5 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து மாநாடு நடைபெறும். அன்னை மணியம்மையார் நினைவு நூற்றாண்டு பந்தலை (திலகர் திடலை) சென்றடைந்தது.

ஒரு சிறு சலசலப்புமின்றி மிகவும் நேர்த்தியாகக் கட்டுப்பாட்டுடன் பேரணி நடந்தது. காவல்துறையின் ஏற்பாடும் ஒத்துழைப்பும் மிகவும் அருமை! அருமை!!

பேரணியின் எழுச்சி தமிழர் தலைவரை பெரிதும் கவர்ந்தது. தஞ்சை வாழ் பொது மக்களும் இப்படி ஒரு நேர்த்தியான பேரணியை இதற்குமுன் கண்டதில்லை என்று வியக்கும் அளவுக்கு எல்லாம் நேர்த்தி! நேர்த்தி!! நேர்த்தியே!!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner