எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அருமைத் தமிழ்க் குலத்தீர்! தஞ்சை மாநகரில் வரும் 23, 24 சனி, ஞாயிறு இருநாட்களில் திராவிடர் கழகத்தின் மாநில மாநாடும், சமுக நீதி மாநாடும் நடக்க இருக்கின்றன.

தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு என்றால் அதற் கென்று   தனித்த முத்திரை உண்டு - உண்டு.

எத்தனையோ திருப்பங்களைத் தந்த தித்திக்கும் ஏடுகளைக் கொண்ட எத்தனை மாநாடுகள் ஆங்கே! ஆங்கே!

அரிமா நோக்கோடு பார்த்தால் நமக்கே திகைப்பாக இருக்கிறது. அடேயப்பா! இத்தனை இத்தனை மாநாடுகளா ஒரே  ஊரில்? என்று எண்ணிப் பார்க்கும்பொழுது நமது உடலை நாமே கிள்ளிப்பார்க்க வேண்டியுள்ளது.

இதோ ஒரு பட்டியல்:

1927 முதல் 2018 வரை தஞ்சையில் நடைபெற்ற மாநாடுகள்

1. தஞ்சை ஜில்லா பார்ப்பனரல்லாதார் 6ஆவது மகாநாடு - 08.05.1927

2. தஞ்சை சுயமரியாதை வாலிபர்கள் மகாநாடு (பார்ஃஅல்) -26.02.1928

3. தஞ்சை சுயமரியாதை மகாநாடு - 24, 25-05-1931

4. தஞ்சை - சென்னை மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடு - 8, 9-10-1932

5. தஞ்சை ஜில்லா 4ஆவது சுயமரியாதை மகாநாடு - 19, 20-01-1935

6. தஞ்சை 5ஆவது சுயமரியாதை மகாநாடு - 21, 22-031936

7. தஞ்சை ஜில்லா 6ஆவது சுயமரியாதை மகாநாடு 19-02-1938

8. தஞ்சை திராவிடர் வாலிபர் மகாநாடு - 11-07-1944

9. தஞ்சை திராவிடர் மாணவர் மகாநாடு 24-09-1944

10. தஞ்சை மாவட்ட திராவிடர் மகாநாடு 18-05-1946

11. தஞ்சை திராவிடர் கழக (ஸ்பெஷல்) மாநாடு, (அரண்மனைத்திடலில் எடைக்கு எடை வெள்ளி நாணயம் வழங்கும் விழா) - 2.11.1957

12. தஞ்சாவூரில் திராவிடர் கழக மாநாடு - 3.12.1966

13. தஞ்சாவூரில் சமதர்ம மாநாடு - 4.12.1966

14. தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் மாநாடு - 15.05.1971

15.தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மாநாடு - 16.05.1971

16. தமிழர் தலைவருக்கு புதுக்கார் பரிசளிப்பு விழா - 19.8.1973

17. சுயமரியாதை இயக்க பொன்விழா - 22.01.1976

18. தஞ்சை மாவட்ட நிர்வாண சாமியார்கள் ஓட்டம் (தோழர்களின் ஏற்பாடு) -12.04.1977

19. தந்தை பெரியார் நூற்றாண்டு விழா - 16, 17.09.1979

20. தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அரசு ஆணை கோரி போராட்ட விளக்க மாநாடு - 14.08.1982

21. தஞ்சை மாவட்ட திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாடு - 25.07.1983

22.தஞ்சை மாவட்ட திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாடு - 15.05.1984

23. தஞ்சை மாவட்ட திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாடு - 15.05.1986

24. தஞ்சை மாவட்ட குடியரசுத் தலைவர் பங்கேற் சமூக நீதி மாநாடு - 24, 25.05.1987

25. தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மாநில மாநாடு - 25.05.1990

26. தஞ்சை மாவட்ட சமூக நீதி மாநாடு - 26.05.1990

27. தஞ்சை மாவட்ட ஜாதி ஒழிப்பு மாநாடு - 20.02.1995

28. தஞ்சை மாவட்ட மனிதநேய மாநாடு மற்றும் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடைத் தங்கம் வழங்கும் விழா - 01.02.1998

29. தஞ்சை மாவட்ட மாநில மாநாடு - 23.04.1999

30. தஞ்சை மாவட்ட திராவிடர் கழக வழக்குரை ஞர்கள் மாநாடு - 07.04.2001

31. தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மண்டல மாநாடு - 30.12.2002

32. தஞ்சை மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 27.11.2003

33. உலக நாத்திகர் மாநாடு (ஒரு பகுதி) 8.01.2011

34. தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மாநாடு - 05.03.2011

35. தஞ்சை மாவட்ட அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பெண்கள் மாநாடு - 10.03.2012

36. தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு - 29.05.2018

சுயமரியாதை இயக்கக் காலந்தொட்டு எண்ணரும் மாநாடுகள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரசில் இருந்தபோதே இதே தஞ்சையில் 1921ஆம் ஆண்டில் வகுப்புவாரி உரிமை தீர்மானத்தை முன்மொழிந்தார்  தந்தை பெரியார். தந்தை பெரியாரின் 'அருமை நண்பர்' சக்ரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார்.

“நாயக்கரே, இதைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வோம் - தீர்மான ரூபமாக இப்போது வேண் டாம்“ என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க தந்தை பெரியார் வற்புறுத்தவில்லை.

தஞ்சையைத் தொடர்ந்து ஒவ்வொரு காங்கிரசு மாநாட் டிலும் அத்தீர்மானத்தை வலியுறுத்திய போதெல்லாம் ஏதோ சாக்குபோக்குகளைச் சொல்லி தந்திரமாக அத் தீர்மானம் நிறைவேறாமல் தள்ளிப் போட்டே வந்தனர். கடைசியில் காஞ்சியில் தான் (1925) இந்தப் பார்ப்பனர்களை நம்பிப் பயனில்லை - ஒரு கை பார்ப்பது என்று தந்தை பெரியார் முடிவெடுத்து, துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறிய வீர தீர வரலாறு எல்லாம் சாதாரணமானதா!

அன்று 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்குத் தடை விதித்த தர்ப்பைப்புல் கும்பல் இன்று 10 சதவிகிதத்திற்கு தள்ளாடிக் கொண்டு நிற்கிறது!

அரும்பாடுபட்டு அய்யாவின் தலைமையில் மேற் கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக தமிழ்நாட்டில்

69 சதவிகித இடஒதுக்கீட்டினை சட்டப்படியாக அனுப வித்துக் கொண்டுள்ளோம்.

ஆனாலும் அவ்வப்பொழுதும் ஆரியப்பாம்பு சமூக நீதியின் கழுத்துப் பக்கம் கடித்துக் குருதி குடித்துக் கொண்டுதான் வருகிறது.

உயர்ஜாதிக்காரர்களுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது தந்திரமாக ஒட்டகம் உள்ளே நுழையும் கதைதான்.

இதற்கெல்லாம் சரியாக சூடு போட்டுக் கொழுக் கட்டையாக வீங்க வைக்கும் மண் தஞ்சை தரணி தானே!

தலைவர்கள் எல்லாம் திரண்டு வருகிறார்கள். தஞ்சை மாநாட்டைத் தரணி வியக்கச் செய்ய கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள், கருஞ்சட்டைப் போர் குணத் தீரர்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஓயாப் பணியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும்  கழகப் பொறுப் பாளர்கள் சுவரெழுத்துப் பணிகள், விளம்பரப் பணிகள், வசூல் பணிகளில் பம்பரமாகச் சுழன்று சுழன்று பணியாற்றிக் கொண்டுள்ளார்கள்.

வெளியூர்களில் இருந்து குடும்பம் குடும்பமாக வரும் தோழர்கள் தங்குவதற்கான மண்டபங்களை யெல்லாம் ஏற்பாடு செய்து விட்டனர்.

மாநாடு நடக்கும் காலப்பொழுதின் தட்பவெப்பமும் சிறப்பானதே! தேர்வுகள் இல்லை; தேர்தல் வேண்டு மானால் நெருங்கலாம். தேவையான மாநாடுகள் தேவை யான பருவத்தில் நடைபெற உள்ளன.

வாரீர்! வாரீர்!

குடும்பம் குடும்பமாக வாரீர்!

உங்கள் உறவினரோடு வாரீர்!

சுற்றம் சூழ வாரீர்!

சூத்திரப் பட்டம் ஒழிய, பஞ்சமப் பட்டம் பஞ்சாய்ப் பறக்க, பெண்ணடிமைத்தனம் அடிபட்டுக் கீழே சாய, சமதர்ம - சமத்துவ - சமுக நீதி சங்கெடுத்து ஊதுவோம் வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் அழைக்கிறார்! அழைக்கிறார்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner