எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* மின்சாரம்

மூடநம்பிக்கையைக் கண்மூடித்தனமாகப் பரப்புவது என்பதுதான் பார்ப்பனர்களின் உயிர் மூச்சு.

மூடநம்பிக்கைப் பொதிச் சேற்றில் மூழ்கடிக்கப்பட்டால் - மூளையில் அந்த விலங்கை மாட்டிவிட்டால் மாட்டு மூத்திரம், சாணியைக் கலந்து கொடுத்தாலும் பஞ்ச கவ்யம் என்று நம்பி தட்சணை கொடுத்துக் குடிப்பார்களே - குடிக்கவும் வைத்து விட்டார் களே!

ஜெகத் குரு என்று தலையில் தூக்கிக் கூத்தாடும் கும்பல் - அந்த சங்கராச்சாரியாரை ஒரு டம்ளர் மாட்டு மூத்திரத்தையும், மாட்டுச் சாணியையும் கரைத்துக் குடிக்கச் சொல் லுங்கள் பார்ப்போம் என்று எந்தப் பக்தனும் கேட்க மாட்டான்; காரணம் அவன் புத்திதான் மூக்கு முட்ட மூடநம்பிக்கையில் புரையேறிக் கிடக்கிறதே. மூளையில் விலங்கு முளைக் குச்சி அடித்து மாட்டப்பட்டுள்ளதே.

கடைசிக் குழவிக்கல் (அதுதான் கடவுள்) இருக்கும் வரைக்கும் பார்ப்பன ஆதிக்க மூச்சுக் காற்று இழுத்துக் கொண்டுதான் இருக்கும்.

கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும் - அவன் கெட்ட இடம்தான் கடவுள் மதம் கெட்ட இடமாகும் என்கிறார் பகுத்தறிவுப் பகல வன் தந்தை பெரியார் (விடுதலை, 24.4.1967).

பார்ப்பானும், இந்தக் கடவுள் மத சமாச்சாரங்களும் ஒன்றோடு ஒன்று ஈர்த்து நிற்கும் நகங்களும் - சதைகளுமே!

அதனால்தான் கோயில் சிலைகள் திருடு போனாலும், கோயில்கள் தீயினால் சாம்பலா னாலும் அந்தக் கடவுள்களுக்கும் சக்தி உண்டு என்று கொஞ்சம்கூட அறிவு நாணய மின்றிக் கரடியாகக் கத்திக் கொண்டே திரிவார்கள்.

பாலியல் உணர்வு மனிதர்களுக்கு உண்டு - அது கவர்ந்து இழுக்கக் கூடிய இயற்கை உணர்வு என்பதைப் புரிந்து கொண்ட இந்தக் கூட்டம், கடவுள் சமாச்சாரங்களுக்குள் பாலி யல் உணர்வையும் தாண்டி - ஆபாசக் கதை களாகப் புனைந்து புகுத்தித் தள்ளியிருக் கிறார்கள்.

நூறு தேவ வருட காலம் சிவனும், பார்வதியும் புணர்ந்தனர் என்று கொஞ்சம் கூட அருவருப்பின்றி பக்தித் தேனில் குழைத்துக் கொடுக்கிறார்கள்.

இயற்கைப் பேரிடரால் - வெள்ளத்தின் பெரு வீச்சால் தத்தளித்து விழி பிதுங்கிப் போனது கேரளா என்கிற போது - மனிதப் பண்பும், நேயமும் இரக்கமும் உள்ளவர் கள் கிறங்கிப் போகத்தான் செய்வார்கள்.

ஆனால் துக்ளக் குருமூர்த்தி அய்யர் வாள், வீடு தீப்பற்றி எரியும் பொழுது அதில் சுருட்டுப் பற்ற வைக்கும் பாதகன்போல, அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் போகலாம் என்று சொல்லுவதா? அய்யப் பனின் கோபத்தால் ஏற்பட்டதுதான் இந்த இயற்கைப் பேரிடர் என்று எழுதுகிறார் என்றால் - இவர்களின் உள்ளத்தில் குடி யிருப்பது கூறுகெட்ட, ஈவு இரக்கமற்ற பார்ப்பனக் கோணல் புத்திதானே.

கடவுள் தேசம் என்று வெட்கமில் லாமல் - கேரளாவை சொல்லுகிறார்களே. அந்தக் கடவுள் தேசம் எப்படி இயற்கைச் சீற்றத்தால் சின்னாப்பின்னம் ஆனது என்ற கேள்வி எழாதா?

கருணையே உருவானவன் கடவுள் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை வெள்ளத்தின் மூலம் வாரிக் கொண்டு போகச் செய்கிறானே கடவுள் - என்று எழுத முடியவில்லையே ஏன்?

தாம் எழுதுவது முரண்பாடானது என்றுகூட சிந்திக்கும் திறனை இழக்கும் அளவுக்கு அவர்களின் தன்னல ஆதிக்கம் தலை குதித்தாடி நிற்கிறதே.

அய்யப்பன் சக்தி ஆக்கத்திற்கா - அழிவுக்கா? அதைவிட இன்னொரு சேதி உண்டு, அதனைப் படித்தால் புழுத்த ஈ எறும்பு கூட வாயால் சிரிக்காது.

இதே அய்யப்பன் கோயிலும், சாமியும் 1952இல் தீப்பிடித்து எரிந்து சாம்பலான கதை தெரியுமா? கோயிலும், அய்யப்பனும் வெடித்துச் சிதறியதோடு நின்று விட வில்லை; 60 பக்தர்கள் பலியானார்களே!

தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத வக்கற்ற கடவுளுக்கு சக்தி எந்த மூலையில் ஒளிந்து கிடக்கிறது?

மதுரை பி.டி.ராஜனும், நவாப் ராஜ மாணிக்கமும் முயற்சி எடுத்தல்லவா கோயி லையும், அய்யப்பனையும் புதுப்பித்தார்கள்.

1999ஆம் ஆண்டில் இதே அய்யப்பன் கோயிலில் கூட்ட நெரிசலில் 52 பேர் பலியானார்களே.

2011 ஜனவரி 14 - ஒரு பொங்கல் நாளில் ஏற்பட்ட விபத்தில் 102 பக்தர்கள் மிதிபட்டுச் செத்தனரே!

தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை; தன்னை நாடி வந்த பக்தர்களையும் காப்பாற்றத் திராணியற்ற கடவுளுக்காக இந்தப் பார்ப்பனர்கள் அடேயப்பா எப்படியெல்லாம் தில்லு முல்லுப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இப்பொழுது மட்டுமல்ல; ஒவ்வொரு கட்டத்திலும் இந்தப் பாழாய்ப்போன பார்ப்பனீயம் இந்தப் பித்தலாட்டத்தைச் செய்து கொண்டேதான் இருக்கிறது.

2013ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடு மழையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டார்களே - அப்பொழுதுகூட என்ன சொன்னார்கள்?

உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா நதியையொட்டி யிருந்த தாரிதேவி கோயில் அதிரடியாக அகற்றப்பட்டதால் தான் அந்தக் கோரம் நடந்தது என்று சொன் னார்களே.

இன்னொன்றும் நினைவு இருக்கலாமே.

காங்கிரசுக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக் கறி சாப்பிட்டுவிட்டு கேதார்நாத் யாத்திரை மேற்கொண் டதாலேயே நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி   சாமியார் கூறிடவில்லையா?

நேபாள நாட்டில் 2015 ஏப்ரல் 25 அன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 4 ஆயி ரம் பேர் உயிரிழந்தார்கள். அரித்துவாரில் பா.ஜ.க.வின் சர்ச்சை எம்.பி. சாக்ஷி சாமியார் செய்தியாளர் களிடம்  கூறுகையில், காங்கிரசுக் கட்சியின் துணைத் தலை வர் ராகுல் காந்தி மாட்டுக் கறி சாப்பிட்டு விட்டே கேதார்நாத் சென்றார். அவர் தன்னை தூய்மையாக வைத்திருக்கவில்லை. இதனால்தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றார்.

இந்த பேட்டியின் போது விசுவ இந்து பரிசத்தின் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான சாமியாரிணி பிராச்சியும் உடனி ருந்தார்.

பாஜக எம்.பி. சாக்ஷியின் இந்த விமர் சனத்துக்கு காங்கிரசு கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரசு கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் கூறியதாவது:

பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி சாமியார் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையே பேசி வருகிறார்.

இந்துப் பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; காந்தி கொலை யாளிகளுக்குப் பாராட்டு தெரிவிப்பது என் றெல்லாம் கூறியவர்.  தற்போது ராகுல் காந்தி கேதார்நாத் சென்றதற்கும், நிலநடுக்கத்துக்கும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.

இத்தகைய பேச்சுகளுக்காக அவர்மீது பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாரே! (ஒன் இந்தியா இணையம், 28.4.2015)

2018ஆம் ஆண்டிலும், சந்திர மண்டலத் திலே குடியேறுவது பற்றிய சிந்தனை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர் - படித்த பார்ப்பனர் - ஆடிட்டர் பார்ப்பனர் - பத்தி ரிகைப் பார்ப்பனர் - ஜெகத் குருக்கள் மக்களின் அறிவின் மீது சம்மட்டி அடியைக் கொடுத்துக் கொண்டு திரி கிறார்கள் - பக்தியின் பெயரால் பகுத் தறிவைப் பாழ்படுத்தி, தங்கள் கால்களை நக்கிக் கிடக்க வேண்டும் என்ற போக் கிரித்தனமான எண்ணத்தில் நொடி தோறும் நொடி தோறும் திட்டம் தீட்டுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் பார்ப்பனர்கள் பிறப்பின் அடிப்படையிலேயே - அவர்களின் மரபு அணுக்களிலேயே குற்ற உணர்வு எனும் குறைபாடு குடி கொண்டு இருக்கிறது என்று தானே கருத வேண்டும் - பார்ப்பனர் அல்லாதார் சிந்திப்பார்களாக!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner