எழுத்துரு அளவு Larger Font Smaller Font
  • மின்சாரம்

அந்த அத்வானியின் கெதி என்ன?

"1996 தேர்தலுக்கு முன் மும்பையில் நடந்த பா.ஜ.க. பேரணியில் அனைவரின் முன்னி லையிலும் அத்வானி, "வாஜ்பாய்தான் பா.ஜ.க.வின் பிரதமர் வேட் பாளர்" என்று அறிவித்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தூய உள்ளம் படைத்த அத்வானியின் தன்னலமற்ற அறிவிப்பில் ஆழ்ந்த அரசியல் ஞானமும், இருந்தது; தான் முக்கியமல்ல, கட்சியும், நாடும் முக்கியமென்று நினைத்த தலைவர்கள் இருந்ததால்தான் பா.ஜ.க. வளர்ந்து ஆட்சியையும் பிடித்தது.

'துக்ளக்' 29.8.2018

அப்படியாகப்பட்ட அத்வானி தானே இப்பொழுது ஓரங் கட்டப்பட்டுள்ளார். எதிர் எதிரே பார்க்கும் பொழுதுகூட உங்கள் பிரதமர் நரேந்திரமோடி ஒரு வணக்கம் தெரிவிக்கும் பண்பாடுகூட இல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாரே!

கேள்வி: திராவிடக் கட்சிகளின் வலிமை வெகு வாகக் குறைந்து விட்டதுபோல் தோன்று கிறது. இதற்கு முக்கிய காரணம்?

பதில்: திராவிடக் கொள்கைகளால் கவரப்பட்டு, ஒரு காலத்தில் தானாக வந்த அலை மோதும் கூட்டம் இப்போது பிரியாணி கொடுத்தால்தான் வருகிறது. இந்த எதார்த்த நிலையை உணர்ந்து காலத்துக்கு ஏற்றார் போல திராவிடக் கட்சிகள் மாறாததால், அவர்கள் வலிமை குறைந்திருக்கிறது! என்பதில் சந்தேகமே இல்லை.

'துக்ளக்' 29.8.2018 பக்.10

அப்படியா சங்கதி? திராவிடக் கட்சிகளின் வலிமை குன்றியதா? பா.ஜ.க. அமோக செல்வாக் கோடு திமிரிக் கொண்டு திரிகிறதா? போட்டியே நோட்டாவுக்கும், பிஜேபிக்கும்தானே! திராவிடர் கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்ள மனு போடாதா?

'மிஸ்டு' காலில் கட்சிக்கு ஆள் பிடித்தீர்களே - கால் ஒடிந்ததுதான் மிச்சமே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லையே! (சி.பி.அய். மாநில செயலாளருக்கே அந்த 'மிஸ்டு கால்' போன பைத்தியக்காரத்தனத்தை என்னவென்று சொல்வது!)

பணம் கொடுத்து ஆட்களைக் கூப்பிட ஏற்பாடு செய்து தேர்தல் நேரத்தில்கூட ஆளில்லாத வெறும் நாற்காலிகள் மட்டுமே இருந்ததை ஏடுகள் எல்லாம் படம் பிடித்துப் போட்டனவே பா.ஜ.க.வுக்கு மறந்து போய் விட்டதா? (படம் காண்க).

காலத்திற்கேற்ப திராவிடக் கட்சிகள் மாற வேண் டுமாம். ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம்   - இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்பவர்களா காலத்திற்கேற்ப மாற்றம் வேண்டும் என்று கூறுவது?

இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தைக் காட்டு விலங்காண்டித்தனமாக அடித்து நொறுக்கிய கைபர் கணவாய்களா காலத்துக்கேற்ற மாற்றம் பற்றிக் கதைப்பது?

கீதையை இந்திய அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று கூசாமல் கூறும் குல தர்ம வாதிகளா மாற்றம் என்பதுதான் மாறாதது என்ற தத்துவத்தைப் பற்றித் தத்துப்பித்து என்று உளறுவது! மாட்டு மூத்தி ரத்தைக் கட்டிக் கொண்டு அலையும் மடிசார் கூட்டமா மாற்றத்தைப் பற்றி மாறிமாறி ஒப்பாரி வைப்பது?

நாங்கள் துவி ஜாதிகள் அதற்கு அடையாளம் தான் இந்தப் பூணூல் என்று அடையாளம் காட்டும் ஆணவக் கூட்டமா மாற்றத்தைப் பற்றி மனசாட்சியில்லாமல் பசப்புவது?

குருமூர்த்திகளே - நீங்கள் என்னதான் நயவஞ்சகமாக எழுதினாலும், இது திராவிட  மண்தான் - பெரியார் மண்தான் என்பதை மறக்க வேண்டாம்!

'இராமனை செருப்பாலடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?' என்று பிரச்சாரம் செய்தீர்களே, 1971இல். 'ஆமாம் அவர்களுக்குத் தான் எங்கள் ஓட்டு' என்று செவுளில் அறைந்தது போல தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்தார்களே - பட்டும் புத்தி கொள் முதல் பெறவில்லையா?

உங்கள் ஆத்துப் பெண்தான் ஒரு திராவிடக் கட்சிக்கு பொறுப்பேற்று, உங்கள் ஜெகத் குருவை 'ஜெயிலில்' தள்ளினார்.

இருக்காதா ஆத்திரம்? சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருவில் அலையப் போவது நீங்கள் தான், எகிறிக் குதிக்க வேண்டாம்!

***

கேள்வி: 'பகுத்தறிவுப் பகலவன்' என்று புகழப்பட்ட கருணாநிதி இறந்தபோது அவரது இறுதிச் சடங்கில் 'வாய்க்கு அரிசி' போட்டது. நவ தானியங்களை சவக் குழியில் போட்டது எல்லாம் எந்தப் பகுத்தறிவைச் சேர்ந்தது?

பதில்: கருணாநிதிக்காக திமுக தொண்டர்கள் செய்த பிரார்த்தனையில் திமுக தலைவர்களுக்கு, திக தலைவர் வீரமணி குறித்த  பயம் நீங்கியது மட்டு மல்லாமல், கருணாநிதிக்கு வாய்க்கரிசிப் போட்டு, பாலூற்றும் அளவுக்கு தைரியம் வந்து விட்டது. பாவம் வீரமணி அவர்களுக்கு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று அரசியலில் இருந்த பகுத்தறிவுப் பகலவனை அவர் இழந்து விட்டார்.

'துக்ளக்' 29.8.2018 பக்.11

கோயபல்சு கூட்டம் இதை மட்டுமா சொல்லும்? ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியைக் கடனாக வாங்கி வந்த வெங்கண்ணா பரம்பரை ஆயிற்றே!

கலைஞரை அடக்கம் செய்த குழியில் போடப் பட்டது உப்பா - வாய்க்கரிசியா என்று தெரியாமலா இப்படி எழுதுகிறார்கள்? பிறந்தது முதல் செத்துப் போனதற்குப் பிறகும்கூட திதி என்று சொல்லி சுரண் டும் புரோகிதக் கும்பலுக்கு வாய்க்கரிசி விஷயம் எல்லாம் அத்துப்படிதானே!

பகுத்தறிவுப் பகலவன் என்று கலைஞர் அவர்கள் தன்னை சொல்லிக் கொண்டதும் இல்லை மற்றவர்கள் அவரை அப்படிச் சொல்லு வதும் இல்லை.

பகுத்தறிவுப் பகலவன் என்று கலைஞர் உட்பட சொன்னது தந்தை பெரியார் அவர்களைத் தான்!

இதெல்லாம் தெரிந்தும் செய்வது பூணூல் குசும்பும் சேட்டையும்தான்.

குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் காஞ்சிபுரத்துக்காரரை (அதுகூட அசல் பித்தலாட்டம் - கும்பகோணத்துக்காரர்தான் அவர்) ஜெகத் குரு என்று 'ஜே' போடும் கூட்டத்துக்குப்  பகுத்தறிவுப் பகலவன் என்றால் சிம்ம சொப்பனம்தானே!

பெரியார் மறைந்து விட்டார் - இனிமேல் நாம் ஆட்டம் போடலாம், ஆட்டைப் போடலாம் என்று ஆசைக் கனவில் மிதந்து கொண்டிருந்த அக்ரகாரத் தின் அடி வயிற்றை அன்றாடம் கலக்கும் அளவுக்கு வீறுகொண்ட, அனல் பறக்கும் அரிமாவாக இருந்து 'தொலை(க்)கிறாரே' என்ற ஆத்திரத்தில்தான் எதற் கெடுத்தாலும் 'வீரமணி அய்யோ வீரமணி' என்ற போபியாவில் (றிலீஷீதீவீணீ) புரண்டு புரண்டு அழுகின்றனர் - அந்த ஆத்திரம்தான் ஆசிரியர் வீரமணிமீது.

அவசரப்படாதே அக்கிரகாரமே - இன்னும் எவ்வ ளவோ இருக்கிறது - அதற்குள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டால் எப்படி?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner