எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: சமீபத்தில் ஈரோட்டில் நடந்த திமுக மாநாடு பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்: சடங்கு போல் நடந்திருக்கிறது என்று தோன்றுகிறது. பெரிய உற்சாகமோ, புத்துணர்வோ, புதிய சிந்தனையோ, புதிய உத்தியோ இருந்தது போல் தெரியவில்லை. திமுக - முன்னே செல்வதற்கு பதில், பலகாலம் பின்னே சென்று தி.க.வின் நிலையைத் தழுவுவதுபோல் தோன்றியது.

(துக்ளக், 11.4.2018, பக்கம் 17)

சடங்கிலேயே விழித்து சடங்கிலேயே நடந்து, சடங்கிலேயே இரவுப்படுக்கச் செல்லும் கூட்டத்திற்கு, சடங்குகளை சாடும் கம்பீரமான மக்கள் திரளைக் கண்டால் குலை நடுங்கத்தானே செய்யும்!

பெரியார் மண் என்ற தலைப்பிலே பேசினாலே அந்த ஈரோட்டுப் பூகம்பத்தின் அதிர்வு அக்ரகாரத்தை அலற வைக்கத் தானே செய்யும். சமூகநீதியைப் பற்றி சண்டமாருதம் செய்தால் சனாதனக் கும்பலின் சதை எல்லாம் நடுநடுங்கத் தானே செய்யும்!

மாநில சுயாட்சியைப் பற்றி மகத்தான குரல் கொடுத்தால் நாடற்ற கூட்டத்தின் நாடிநரம்பெல்லாம் நடுங்கத்தானே செய்யும்! வரலாற்றை மாற்றிய வைர நிகழ்வு களை வரிசைப்படுத்தினால் தங்களின் கைபர் கணவாய்களின் குட்டு உடைந்து விடுமே என்று குமுறத்தானே செய்யும்.

பண்பாட்டுப் படையெடுப்பை பற்றி எல்லாம் வரிசைப் படுத்திக்காட்டினால் பார்ப்பனப் பதர்களின் காதுகளில் எல்லாம் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலத் தானே இருக்கும்.

தி.க.வின் நிலையைத் தழுவுவது போல் தோன்றுகிறதாம் - சபாஷ்! இதைவிட சரியான சான்றிதழை வேறு எங்கே போய்த்தான் தேடமுடியும்.

தி.க.வும் - திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி -  சொன்னவர் அறிஞர் அண்ணா என்பது குடுமி குருமூர்த்தி களுக்குத் தெரியும். தி.க.வின் நிலையைத் தழுவுவது என்பது பின்னோக்கி நகர்வதல்ல - முன்னோக்கி முற்போக்கு திசையை நோக்கி பாய்வதுதான். பழைமைகளை வெட்டிச் சாய்ப்பதுதான் - நால் வருணத்தின் நச்சு வேர்களைச் சுட்டுப் பொசுக்குவது தான் - பிறப்பில் பேதம் பேசும் வேதங்களையும், மனுஸ்மிருதிகளையும், இதிகாசங்களையும் புராணங்களையும் ஒட்டு மொத்தமாக ஒழித்திடச் சூளுரை எடுப்பது என்று தான் பொருள்.

பெண்ணுரிமைக்குப் பேரிகை கொட்டுவது - மூடநம்பிக்கைக்கு கொள்ளி வைப்பது - சமூகநீதிக்கு சரித்திரம் படைப்பது - இந்திக்கும், சமஸ்கிருதத் திற்கும் சமாதி கட்டுவது - சுயமரியாதைக்கு மகுடம் சூட்டுவது - பகுத்தறிவுக்குப் பாதை அமைப்பது - சமத்துவத்துக்கும் சமதர்மத்துக்கும் ராஜபாட்டை அமைப்பது - ஒடுக்கு முறைகளுக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவது - ஆதிக்க சக்திகளை அடியோடு வீழ்த்துவது - மனிதநேயத்துக்கு மகுடம் சூட்டுவது - சகமனிதனை தீண்டாதே என்னும் சங்கர மடங்களின் சங்கதிகளையெல்லாம் சந்தி சிரிக்க வைப்பது - ஜெகத்குரு என்ற போர்வையில் சல்லாபம் ஆடும் கூட்டத்தின் முகத் திரையை கிழித்து முச்சந்தியில் நிறுத்துவது - சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பது - மானமும் அறிவும் மனிதர்க்கழகு என்று கூறி மன்பதையை மேலே உயர்த்துவது - கடவுளை மற, மனிதனை நினை என்ற மாண்பினை கற்பிப்பது - பக்தி தனி சொத்து, ஒழுக்கம் பொதுச்சொத்து என்ற உயர் கொள்கையை பரப்பி ஒழுகச் செய்வது - கடமையை செய்து உரிமைக்காக உயிரை யும் கொடுக்கும் உன்னத உணர்வை ஊட்டக்கூடியது - இந்த தத்துவங்களுக்குப் பெயர்தான் துக்ளக் சொல்லும் அந்தத் தி.க.! அந்த தி.க.வை நோக்கி திமுக செல் கிறது என்று துக்ளக் எழுதுகிறது - குரு மூர்த்தி அய்யர்வாள் திமிர் முறித்து எழுது கிறார் என்றால் - இந்த ஆபத்தின் ஆழ மும் வீரியமும் என்ன என்பது அவர்க ளுக்கு நன்றாக தெரிகிறது என்று பொருள்.

உங்களைப்பற்றி ஒருவரியில் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு மானமிகு சுயமரியாதைக்காரன்! என்று சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆயிற்றே!  அவர் கலந்து கொள்ளாத ஒரேயொரு திமுக மாநாடு - ஈரோட்டில் நடந்தது தான் - அவர் இல்லாமலேயே திமுக தி.க.வை நோக்கி செல்லுகிறது என்பதை எதிரிகளின் வாயாலேயே கேட்கும்பொழுது உள்ளம் குளிர்கிறது, உடலெல்லாம் புல்லரிக்கிறது.

அவர்களுக்கு தெரியும் - ஆம், நன்றாகவே தெரியும் இந்தியாவில் இந்து ராஜ்ஜியம், இராம ராஜ்ஜியம் என்ற எண்ணத்திற்கு இடியாக இறங்குவது இந்த ஈரோட்டுக்காரரின் தத்துவம் தான்!

இது தமிழ்நாட்டிலிருந்து இந்தியா பூராவும் பரவி, இந்துத்துவாவின் மூலநரம்பு களையெல்லாம் துழாவித் துழாவி, திசுக் களை யெல்லாம் விடுபடாமல் தொட்டுப் பார்த்துப் பார்த்து, ஒரே மூச்சில் சுட்டெரிக் கக்கூடியது என்பது அவாளுக்கு நன்றாகவே தெரியும்.

இப்பொழுதே நீட்டை எதிர்த்து, டில்லி வீதிகளில் முழக்கம் போட்டுச் செல்லும் மாணவர்கள் ஏந்திச் செல்லும் பதாகைகளில் ஒருபக்கத்தில் தந்தை பெரியாரும் இன்னொரு பக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் படங்கள் தான்.

ஜிந்தாபாத் - ஜிந்தாபாத்! பெரியார் ஜி ஜிந்தாபாத்! என்ற முழக்கம் இந்தியாவின் தலைநகரிலேயே வெடித்துக் கிளம்பி விட்டது. காசி பல்கலைக்கழக மாணவர் கள் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

இது காலத்தின் அறிகுறி - காகபட்டர் பரம்பரையே துள்ளாதே! நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார் ஜூன் கார்கே (காங்கிரசு) கைபர் கணவாய் கூட்டமே எச்சரிக்கை என்று கர்ஜிக்கிறார். ஆம், அது கார்கேயின் குரல் அல்ல - அது கருஞ்சட்டையின் அரிமாக் குரல் - தந்தை பெரியாரின் தன்மானக்குரல். சும்மா சொல்லக்கூடாது - ஈரோட்டில் நடைபெற்ற திமுக மாநாடு ஆரியக்கூட்டத்தின் அஸ்தி யில் ஜூரத்தை உண்டுபண்ணி விட்டது.

ஈரோட்டில் திமுக மாநாட்டை நடத்திய அத்துணை தோழர்களுக்கும் பாராட்டு! பாராட்டு!!

தொடரட்டும் இத்திசையில் திமுகவின் பகுத்தறிவு இனமானப் பணிகள்!

 

==========================

குருமூர்த்தி வாளுக்குத் தெரியுமா? - உண்மை நாஸ்திகன் யார்?

 

நாத்திக அரசியல், தமிழ்ப்பிரிவினைவாதம் போன்ற தனது பழைய பாணியிலிருந்து திமுக மாறினால் அதற்கு ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கும். தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது என்பது வெளிப்படை.

- துக்ளக் 14.3.2018, பக்கம் 15) எஸ்.குருமூர்த்தி

எங்கே சுற்றிவந்தாலும் பார்ப்பனர்களுக்கு திமுகவின் அந்த நாத்திகக் கொள்கை பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. நாத்திகம் என்ற அந்தச் சொல்லில் ஏதோ கடவுள் மறுப்பு என்று மேம்போக்காகப் பொருள் கொள்ளக்கூடாது.

இந்துமதத்தை பொருத்தவரை கடவுள் மறுப்பு என்பது நாத்திகம் அல்லவே! வேத மறுப்புதான் நாத்திகம் என்பது.

இதனை நாம் சொல்லவில்லை; மறைந்த சூப்பர் சீனியர் சங்க ராச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதியே அருமொழியாக அருள் பாலித்திருக்கிறார் இதோ அது.

நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வர வாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக்கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.

அப்படிப்பட்ட பலபேர் இருக்கிறார்கள் இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகர் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.

வைதீக வாழ்க்கையை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. தீவிர பக்தி இல்லாமலிருந்தால் கூட அல்ல என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகேந்திரர் எடுத்து வழங் கினாரே (தெய்வத்தின் குரல் 2ஆம் தொகுதி, பக்கம் 407-408)

பார்ப்பனர்களின் மனுஸ்மிருதியும் அதையேதான் அழுத்தமாகக் கூறுகிறது.

வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டை யும் தர்க்க யுத்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான்

(மனுதர்மம் அத்தியாயம் 2 சுலோகம் 11)

 

இதனைப் புரிந்துகொண்டால் வருணாஸ்ரமத்தை, ஜாதியை எதிர்க்கும் எவரும் இந்து மதத்தின்படி நாஸ்திகர்களே.

திமுக இத்தகைய பணியில் ஈடுபடுவது என்பதை வரவேற்க வேண்டுமே தவிர - குறை கூறுவதற்கு என்ன இருக்கிறது?

திமுக பழைய பாதையிலிருந்து விடுபட வேண்டும் என்ப தற்குப் பதிலாக பார்ப்பனர்கள் பூணூல் தரிப்பது உட்பட தங் களின் பழைய பாணியிலிருந்து விடுபட்டால் தப்பிப் பிழைக்க முடியும், மீண்டும் பூணூல் தனத்தில் ஈடுபட்டால் இளைஞர்கள் எதிர் வினையைத்தான் செய்வார்கள் - எச்சரிக்கை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner