எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- கவிஞர் கலி.பூங்குன்றன்

இந்துத்துவா, ஜாதி, திராவிடம் என ஒன்று கூட விடாமல் மோதிப்பார்த்து தமிழகத்தில் ஒன்றும் போணி ஆக வில்லை என்று தெரிந்த உடன் அடுத்த உத்தியாக தமிழைக் கையில் எடுத்துள் ளது பாரதிய ஜனதா கட்சி.

மோடி சில நாட்களுக்கு முன்பு பரிக்ஷ பர் சர்ச்சா (தேர்வுகளைப் பற்றி விவாதிப்போம்) என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களி டம் 2 மணி 37 நிமிடம் பேசினார். அந்தப்பேச்சில் எந்த ஒரு சரக்கும் இல்லை, இருந்தாலும் மோடி பேசுவதை கட்டாயம் அனைத்துப் பள்ளிகளிலும் ஒளிபரப்பவேண்டும் என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் உத்தர விட்டதால் நாங்கள் அதை ஒளிபரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூறினார்கள்.

“சும்மா ஆடுமா குடுமி?” என்ற பழமொழிக்கேற்ப மோடி இங்கும் ஓர் அரசியலை மேற்கொண்டுள்ளார். தேர் வுகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென்று “தமிழ் மிகவும் பழைமையான மொழி, சமஸ்கிருதத் தைவிட பழைமையான மொழி, தமிழ் மொழி மிகவும் அழகானது” என்று கூறி தனது தமிழ்ப் பாசத்தை மாணவர்களிடம் காட்டியுள்ளார்(?)

இதில் வேடிக்கை என்னவென்றால், மோடி அங்கு பேசியது இந்தியில், தமிழ கம், கருநாடகா, ஆந்திரா, மேற்குவங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தி பேசுவதில்லை, அங்கு உள்ள ஆசிரி யர்களுக்குக் கூட இந்தி தெரியாது, அப்படி இருக்க மோடி இந்தியில் பேசியதை மாணவர்கள் எப்படி புரிந்து கொள் வார்கள்? மோடியின் இந்தத் திடீர் தமிழ்ப் பாசம் அல்லது மொழிப்பாசம் ஏன் வெளிப்பட்டது என்று வட இந்திய அரசியல் களம் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொள்ளட்டும்!

ஆனால் மோடியும் பாஜகவும் எதிர்பார்த்ததைப் போல் மோடியின் இந்தப் பேச்சு எந்த ஒரு பரபரப்பு அலையையும் தமிழகத்தில் ஏற் படுத்தவில்லை. மோடியின் மோடி மஸ்தான் வேலைகளை அறிந்ததா யிற்றே தந்தை பெரியாரின் தமிழ் மண். டில்லியில் அமித்ஷாவும், மோடியும் தமிழ் பற்றி பேசியதும் “தமிழகமெங்கும் மோடி பற்றி பேசப்படும், ஊடகங்கள் இதையே தலைப்புச்செய்தியாக எழு தும் என்று நினைத்து காய்நகர்த்தி னார்கள். ஆனால் அவர்களின் இந்த முயற்சியும் திரைக்கே வராமல் பெட் டியில் முடங்கிய படச்சுருள்” போல் ஆகிவிட்டது.

மோடியின் இந்தப் பேச்சை தினசரி அரசியல் பற்றி விவாதிக்கும் தேநீர்க் கடை விமர்சகர்கள்கூட தங்கள் முன்பு உள்ள மேசையைத் துடைக்கத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தமிழகத்தில் புரோகிதம் செய்யவந்த பன்வாரிலால் புரோகித், கோவையில் நான் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசப்போகிறேன் என்றார். 2015ஆம் ஆண்டு மதுரையில் ஜாதி அரசியலைத் துவக்கமுயற்சி செய்ய அந்த அமித்ஷா, நான் தமிழ் பேச விருப்பமாக இருக்கி றேன் என்றார். அந்த வரிசையில் தற் போது மோடி புதுமுயற்சியில் இறங்கி யுள்ளார். ஆனால் மோடி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவரை வணக் கம் என்பதைத் தவிர வேறெந்த ஒரு வார்த்தையையும் கற்றுக்கொள்ள வில்லை.

டிசம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் பார்வையிட வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்குள்ள மக்களிடம் தமிழில் (டமிளில்) பேசினார்.

அதுவும் “அக்ஷர ஷூத்தமாக ப்ராமணாள் பாஷை” பேசினார். அவர் பேசியதை அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரி தமிழில் விளக்கிக் கூறியதுதான் நகைச்சுவையான ‘தேன் குழலி’, ஆங்கிலத்தில் பேசினாலோ, இந்தியில் பேசினாலோ மொழி பெயர்க்கலாம். ஆனால் மத்திய அமைச்சர் அவருக்கு சொந்தமான தமிழில் பேச பொது மக் களுக்குப் புரியாமல் போகவே அதைப் பொதுமக்களின் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியதாயிற்று.

தமிழகத்தின் அடையாளம் தமிழ். தமிழும் அதன் அரசியலும் இங்கே பிரிக்க முடியாதது, இங்கு எத்தனை மோதல்கள் வந்தாலும் தமிழ் என்ற ஒன்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இங்கு அரசியல், கலாச் சாரம், பொதுவாழ்க்கை அனைத்திலுமே தமிழ் இரண்டறக் கலந்துள்ளது. இந்தத் தமிழை வைத்து தாமரையை மலர வைக்கும் முயற்சியைக் கையில் எடுத்தால் எதிர்வினைகளைத்தான் சந்திக்க வேண்டும்.

இம்முறை அமைச்சர் மாஃபா பாண் டியராஜன் தமிழ் குறித்த மோடியின் பேச்சை மிகவும் பெருமையாக பேசி யுள்ளார். அதாவது மோடி தமிழ்க் கலாச் சாரத்தையும் தமிழையும் உயர்த்திப் பேசியுள்ளதை பெருமை என்று கூறி னார். இங்கே தமிழை வைத்து கட்சியை வளர்க்க முடியும் என்று மிகவும் தாமத மாக முடிவெடுத்துவிட்டார். இதில் தமி ழக பாஜக தலைவரின் பெயரிலேயே தமிழ் (தமிழ் இசை) உள்ளது. ஆனால் அவரின் பெயருக்கும் உணர்வுக்கும் வெகு தொலைவு.

மோடி ஏதோ ஒன்று நினைத்துப்பேச அதைக்கூட புத்திசாலித்தனமாக தனக் கான ஒன்றாக மாற்றிவிட்டார் எதிர் கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின்: மோடிக்கு தமிழ் மீது இவ்வளவு பாசம் இருக்கிற தென்றால் எங்கள் திருக்குறளை தேசிய நூலாக்க உத்தரவிடுங்கள், தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க உதவுங்கள் என்று உடனடி அறிக்கை ஒன்றை விட்டார்.

மோடி மேடையின் எதிரே அமர்ந் திருப்பவர்களின் நாடியைப் பிடித்துப் பேசுபவர் என்று பொதுவாக வட இந்திய ஊடகங்கள் புகழாரம் சூட்டும் ஆனால் தமிழர் விவகாரத்தில் புலிவால் பிடித்த நாயராகிப்போனார் மோடி என்பதுதான் உண்மை.

தமிழகத்தில் எந்த ஒரு மொழிக்கும் எதிரான நிலை உருவாகவில்லை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த தமிழகத் தில்தான் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டு இருக்கும் இந்தி பிரச்சார சபா உள்ளது, இங்கே ஆட்சியாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் இந்திக்கு எதிரானவர்கள் என்ற ஒரு பிரச்சா ரத்தை வட இந்தியாவில் சில மத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், சில அரசியல் கட்சிகளும் வெளிப்படை யாக பேசிக்கொண்டு திரிகின்றனர்.

ஆனால் இன்று நிலை என்ன? பஞ்சாப், மேற்குவங்கம், கருநாடகா என பல மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு வெகுண்டு கிளம்பி விட்டது.

பாஜகவினர் எவ்வளவுதான் வேடம் போட்டாலும் அவர்களது காவிக் கொண்டையை மறைக்க முடியாது. எடுத்துக்காட்டாக தருண்விஜய் திடீரென திருக்குறள் மீது பாசம் கொண்டு தமிழகம் முழுவதும் வலம் வந்தார். இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் கூட அவரது பாசாங்கு ஆட்டத்தில் மயங்கி விட்டார் கள். அவருக்கு மேடை அமைத்து கொடுத்து விருதுகள்கூட வழங்கப் பட்டன. ஆனால் அரித்துவாரில் திரு வள்ளுவர் சிலையை வைக்க கடுமை யாக எதிர்ப்பு கிளம்பியது. ‘ஒரு சூத்தி ரன் சிலையை அரித்துவாரில் வைப் பதா?’ என்று பாஜகவினரே பாய்ந்து பிராண்டினர்!

அத்தனைத் தமிழர்களையும் அவ மானப்படுத்தும் வகையில் பொதுப் பணித்துறையை பயன்படுத்தி குப்பை கள் போடப் பயன்படும் பைகளில் திரு வள்ளுவர் சிலையை கட்டி வீசிவிட்டுச் சென்றனர், செய்தது மாவட்ட நிர்வாகம். இறுதியில் ஒரு பூங்காவின் ஓரத்தில் பீடமமைத்து அங்கே நட்டுவைத்தார்கள். இப்போது அந்தப்பூங்காவை பதஞ்சலி நிறுவனத்தின் கையில் ஒப்படைத்து விட்டார்கள். அங்கே அந்த நிறுவனப் பதாகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் வைக்கும் திறந்தவெளி கிடங்காக ஆகி விட்டது.

மோடியின் திடீர் தமிழ் ஆர்வம் குறித்து மக்கள் மொழித்துறை ஆய்வா ளர் என்.டெவி கூறியதாவது, “மோடி திடீரென்று தமிழ் மீது பாசத்தைப் பொழிந்து தள்ளியுள்ளார். அவருக்குத் தமிழ் குறித்த முந்தைய வரலாறு தெரிய வில்லை. தமிழுக்கு மதம் ஒரு அடை யாளம் அல்ல, இங்கே சங்ககாலம் தொட்டு சமணம், பவுத்தம், சைவம், வைணவம் அதன் பிறகு கிறித்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களும் தமிழுக்குள் அய்க்கியமாகியுள்ளன” என்று கூறினார்.

ஆனால் அவரது கட்சிக்காரர்கள் தமிழ் இந்து, இந்துத்துவத் தமிழ் என்று முழங்கிக்கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் ஆண்டாள் சர்ச்சை விவகாரத் தில் கூட ஆண்டாளின் தமிழைத் தாண்டி இந்து மதப் பெண் கடவுள் என்ற கூடா ரத்தில் அடைத்தனர். ஒரு மொழி பற்றி பேசும் போது அதன் ஆழத்தைப் புரிந்துகொண்டு பேசவேண்டும், நானும் பேசுகிறேன் என்று பள்ளி மாணவர்கள் முன்பு பேசிவிட்டு நடையைக் கட்டுவது அழகல்ல. இன்றளவும் இந்தி திணிப் பைத்தான் வலுக்கட்டயமாக தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறார்கள். முதலில் மோடி தமிழைப் பற்றிப் பேசும் முன்பு அவரது கட்சிக்காரர்களிடம் பேசட்டும்.

தமிழைக் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பார்ப்பனீயத்தை - எதிர்த்துக் குரல் கொடுப்பாரா மோடி சாகேப்? தமிழ் நீஷப்பாஷை, சமஸ் கிருதம் தேவப்பாஷை எனும் சங்கர மடத்தை மட்டை இரண்டு கீற்றாகக் கிழிப்பாரா? தமிழைப் பற்றி கித்தாப்புப் பேசும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி சாகேப்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner