எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி அருகில் மஹந்திரா நிறுவனம் சார்பாக புதிதாக கட்டப்பட்டு வரும் happy nest என்ற அடுக்குமாடி குடி யிருப்புக்கான விளம்பரம் பெரிய பெரிய பிளெக்ஸ் போர்டுகளில் வைக்கப்பட்டுள்ளது, அதில் வீடு வாங்கிய ஒரு கணவன் மனைவி ஜோடி தங்கள் பெயர் பலகையை தாங்கள் வாங்கிய வீட்டு வாசலில் பதிப்பதாக விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விளம் பரத்தில் இடம் பெற்றிருப்பது அவர்களின் பெயரல்ல. ஜாதிப்பெயர், மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர் என்று குறிப்பிடுகிறது அந்த பெயர் பலகை.

தமிழ்நாட்டுக்காரர்கள் என்றாலே அல்லது தமிழ்நாடு என்றாலே அதற்கு அடையாளமாக பார்ப்பனர்களையும், பார்ப்பன கலாச்சாரத்தையும் காட்டுவதே பல காலமாக தொடர்ந்து திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்திலும் அப்படியே விளம்பரப்படுத்துகிறது மஹேந்திரா நிறுவனம். தமிழ்நாட்டில் ஜாதிப்பெயர்கள் சமூக தளத்தில் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அவற்றை மீண்டும் கொண்டுவர பல முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வேறு மாநிலங்களைச் சேர்ந்த திரைப்பட நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள் மூலமும் மீண்டும் மீண்டும் இந்த சதி செய்யப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோண்டா ஸ்ப்ளெண்டர் விளம்பரத்துக்கு இதேபோல் நடந்தது. ஒவ்வொரு மாநிலத் திற்கும் அந்த மாநிலத்தின் குறிப்பிட்ட ஜாதியை நினைவு படுத்தி விளம்பரம் செய்யப்பட்டது. அப்போதும் தமிழ்நாட் டின் அடையாளமாக ஷிவ்ராம் அய்யர் என்றும், ஸ்ப் ளெண்டர் அய்யர் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு கடும் எதிர்ப்பைச் சந்தித்து மறுநாளே அனைத்து ஊடகங்களிலும் ஜாதிப் பெயர் நீக்கப்பட்டு, விளம்பரம் வெளியிடப்பட்டது. இதுதான் பெரியார் மண்ணின் தனித்தன்மை. அதே போன்ற ஒரு திணிப்பைத்தான் இப்போதும் இந்த நிறுவனம் செய்துள்ளது.

‘பிராமின்ஸ் ஒன்லி’ என்கிற விளம்பரம் செய்யப்படும் அடுக்ககங்களும், ‘விஜிட்டேரியன் ஒன்லி’ என்று மறைமுக மாக விளம்பரம் செய்யும் அடுக்ககங்களும் நவீன அக்கிர காரங்களாக எதிர்ப்புக்கிடையில் உருவாகிவரும் சூழலில் மஹேந்திரா நிறுவனம் அப்படியொரு அக்ரகாரத்தைத்தான் கட்டுகிறதா? மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர்கள் மட்டும் அந்த வீடுகளை வாங்கினால் போதுமா? இத்தகைய திணிப்புகளைச் செய்யும் பார்ப்பனச் சிந்தனைகள் நிரம்பிய விளம்பர நிறுவனங்களை அடையாளம் கண்டு புறக் கணிக்க வேண்டாமா?

ஸ்ப்ளெண்டர் மோட்டர் சைக்கிளை விளம்பரப்படுத் திட இப்படி ஒரு முறையைக் கையாண்டது இந்த நிறு வனம்.
ஷிவ்ராம் அய்யர் சௌம்யா அய்யர் குடும்பத் தில் இன்னொருவரும் இணைந் துள்ளார் அவர்தான் ஸ்ப் ளெண்டர் அய்யராம்.

இதே பாணியில் கேரளா வில் நாயர் என்றும், மும்பை மற்றும் புனேயில் படேல் என்றும், டில்லியில் சௌ கான் என்றும் கொல்கத்தா வில் மிஸ்ரா என்றும் இப்படி யாக விளம்பரம் செய்து வருகின்றனர்.

வியாபாரம் செய்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன.

ஜாதிப் பெயர்களை முன்னிறுத்தி விளம்பரங்களைச் செய்யவேண்டுமா? இதன் பின்னணி என்ன?

இன்னொரு தகவலும் இது தொடர்பாக உண்டு. சில மாதங்களுக்கு முன்பு இதே சென்னையில் தான் - தரமணி பகுதியிலே உள்ள ஓர் அமெரிக்க நிறுவனம் - அதன் பெயர் பேபால் (Paypal)

அந்த நிறுவனத்தின் ஆண்டு விழா! (நடத்தட்டும்! நடத்தட்டும்! மகிழ்ச்சிதான்!)

விளையாட்டுப் போட்டிகள் எல்லாம்கூட! திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டாமா?
விளையாட்டுப் போட்டிகள் என்றால் குழுக்கள் (Teams) பிரிக்கப்பட வேண்டாமா?

ஆமாம்! ஆமாம்!! அதில் என்ன சந்தேகம்? நம் பள்ளிக் கூடத்திலே கூட பிரிப்பார்களே! காந்தி அவுஸ், ஜவகர் அவுஸ், நேதாஜி அவுஸ் அல்லது  வண்ணப் பெயர்கள் சிகப்பு, மஞ்சள், நீலம் என்று கூடப் பிரிப்பார்களே!
சில பள்ளிகளில் பூக்களின் பெயர்களைக்கூட

சூட்டுவதுண்டு. முல்லை, ரோஜா, சாமந்தி என்று போகும்.

போபால் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விழாவுக்கான  விளையாட்டுக் குழு எந்தெந்த பெயர்களில் பிரிக்கப்பட்டு இருந்தன? படேல் ஆஃப் குஜராத், பேனர்ஜீஸ் ஆஃப் பெங்கால், சிங்ஸ் ஆஃப் பஞ்சாப், டிசோசாஸ் ஆஃப் கோவா; - என்ன தமிழ்நாட்டைக் காணவில்லையே என்று அவசரப்படாதீர்கள். அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு.
எப்படி இருக்கிறது? படித்தவர்கள் அல்லவா! அவர் களில் மூளை வித்தியாசமாகச் செயல்பட்டால்தானே பெருமை?
ஆமாம் அமெரிக்க கம்பெனியாயிற்றே - அவர்களுக்கு இதெல்லாம்....

சொல்லப் போவது புரிகிறது! புரிகிறது!! ஆனால் ஆங்கே பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் யார்? அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் “Brahmins! Brahmins”

ஓகோ! கதை அப்படிப் போகிறதா!

பிரச்சினை வெடித்ததும் வியாக்கியானங்களை சொல்ல ஆரம்பித்தார்கள்.

அய்.பி.எல். கிரிக்கெட்டுக்குப் பெயர் வைக்கவில் லையா? இதெல்லாம் கொஞ்சம் தமாஷ்! எதையும் சீரிய ஸாகப் பார்த்தால் எப்படி? ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் - அவ்வளவு தான்.

ஒண்ணும் இல்லாத விஷயத்தை எல்லாம் துருவித் துருவிப் பார்க்கக் கூடாது - என்று வெண்டைக்காய் விளக் கெண்ணெய் வியாக்கியானங்கள்! பிரச்சினை  பெரிதாக வெடித்ததும் ஊற்றி மூடி விட்டார்கள் - காரணம் தமிழ்நாடு அல்லவா!

இப்பொழுது ஒரு முக்கியமான இடத்துக்கு நாம் வந்தாக வேண்டும்.

இப்படி எல்லாம் யாருடைய மூளை வேலை செய்கிறது?

நுட்பமான கேள்வி இது! ஏன் அவசியமான கேள்வி யும்கூட!

தனியார் நிறுவனங்கள் எல்லாம் இப்பொழுது பெரும் பாலும் அக்கிரகாரமாகி விட்டன. அதிலும் முக்கிய பதவி களில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் இடத்தில் எல் லாம் பார்ப்பனர்கள் அட்டாணிக் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு விட்டார்கள்.

(இன்றைக்கு இந்தியாவில் தனியார்த் துறைகளில் இயக்குநர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 9052; இதில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட முன்னேறிய ஜாதியினர் 8367 (92.6%) பிற்படுத்தப்பட்டோர் 34.6 (3.8%) தாழ்த்தப் பட்டோர் 319 (3.5%) (ணிநீஷீஸீஷீனீவீநீ கிஸீபீ றிஷீறீவீtவீநீணீறீ கீமீமீளீறீஹ் - 11.8.2012)

இப்படிப் பார்ப்பனர்கள் தனியார் நிறுவனங்களில் படை எடுத்து, படம் எடுத்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள் அல்லவா!

தனியார் நிறுவனங்கள் எல்லாம் அவாளின் ஆதிக்கப் புரியாகி விட்டால் அதன் பின் கேட்க வேண்டுமா?

அந்த வேலைதான் மோட்டர் பைக் விளம்பரத்திலும் அய்யர், பானர்ஜி மிஸ்ரா - விளையாட்டுப் போட்டிகளிலும் குழுக்களுக்கும் ஜாதிப் பெயர்கள்.

பார்ப்பனர்களாவது வெங்காயமாவது! அதெல்லாம் பழைய காலம்.

இப்பொழுதெல்லாம் அந்தப் பேச்சுக்கே வேலை யில்லை என்று நமது பார்ப்பனர்  அல்லாத மக்கள் அதிலும் கொஞ்சம் படித்தவர்கள் அடுத்தவர்களின் வாய்களையும் கடன்வாங்கி இடக்கு முடக்காகப் பேசுவதுண்டு.

அத்தகைய அதிகப் பிரசங்கிகள் இந்தத் தகவல் களையும், உண்மைகளையும் கண்களை அகல விரித்தும், மூளையைக் கொஞ்சம் கசக்கிவிட்டு, வெளிச்சத்தில் குளிப்பாட்டியும் பார்த்தால் தெரியும். உண்மையான சங்கதி.
2012லும் பிராமணாள் ஓட்டல் வைக்க வந்து விட்டாளே தெரியவில்லையா?

அதிகாரப் பலமும், நம் மக்களின் அப்பாவித்தனம் என்ற பலகீனமும் பார்ப்பனர்களுக்குக் கிடைத்த தெம்பான இரண்டு கால்கள்!

நாட்டில் எவ்வளவோ நடக்கின்றன. இந்தக் கறுப்புச் சட்டைக்காரர்களுக்கு இதுதான் பிரச்சினையா? என்று மிகப் பெரிய விசால மனசுக்குச் சொந்தக்காரர்கள் போல கதைப்பார்கள்.

நாம் திருப்பிக் கேட்க வேண்டும்; நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது - இன்னமும் ஏன் இந்த அய்யர் பிராமணாள் விளம்பரம்?

இதற்கு மட்டும் பதில் சொல்லமாட்டார்கள். ஏனென்றால், அவர்களால் பதில் சொல்ல முடியாது.




.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner